Header Ads



முஸ்லிம்களுக்கு ரைஸி மீது, பாசம் ஏற்பட்டது ஏன்..?


உலக ஊடகங்கள் முழுவதுமாக நேற்றிலிருந்து நிறைந்திருப்பவை இப்றாஹிம் ரைஸியின விபத்து - மரணச் செய்திகள். அது ஒரு நாட்டின் தலைவர் என்பதுவும் அதற்கப்பால், மேல் நாட்டுக் கொடூர மேட்டிமைக்கெதிரான அடையாளமாக அவர் இருந்தார் என்பதற்காகவும்தான்.


அதே பரபரப்பு அதிகமாக இலங்கை முஸ்லிம்களின் முகநூல், வட்ஸ்ஏப் ஊடகங்களையும் துயரத்தோடு பற்றிக் கொண்டதைக் காண முடிந்தது. 


அக்டோபர் 7 - 2023க்கு முதல் இம்மரணம் நிகழ்ந்திருந்தால் இத்துயர் பகிரும் தகவல்களைப் பகிர்வோர் தொகையைக் காண முடியாது போயிருக்கும். இத்திகதிக்கு முன்னர் ஈரான் என்ற பெயரோடு அந்நாட்டுத் தகவல் ஒன்றைப் பகிர்பவர் கூட ”ஷீஆ“ என்று முத்திரை குத்திக் கொண்டிருந்த ”மொக்கை” முஸ்லிம்களால் சமூகம் நிறைந்திருந்தது.


உலகின் முதல் கிப்லா - பள்ளிவாசலையும் நிலம் பறிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையும் பெறப் போராடும் உணர்வு முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் எனச் சொல்லப்படும் “சுண்ணி” முஸ்லிம்களை விட “ஷீஆ” முஸ்லிம்களிடம் இருப்பதைக் கடந்த ஆறேழு மாதங்களில் சமூகம் கண்டு கொண்டதன் விளைவே ரைஸியின் மீதான பாசம். அப்படித்தான் நான் கருதுகிறேன்.


அரச தலைவர்களின் மரணம் நிகழ்வதால் அந்த நாடு அழிந்து போய்விடுவதில்லை. தற்செயலாக அதன் அரசியற் கொள்கை மாறினால் வேறு ஒரு தேசத்தைக் கொண்டு இடைவெளியை இறைவன் நிரப்புவான். தென்னாபிரிக்கா பலஸ்தீனத்துக்காக சர்வதேச நீதிமன்றிம் போகும் என்று நாம் எதிர்பார்தா இருந்தோம்.


முதலில் சக மனிதன் என்ற மரியாதையோடு வாழவேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் சொல்லித் தருகிறது. சர்வதேச சமூக அரசியல் தலைமைத்துவத்துக்காக, அதன் பிரசாரத்துக்காகப் பணம் தருபவனை நக்கித் திரிவதும் அவன் சொல்வதையும் அணிவதையும் அப்படியே பின்கற்றுவதும் அல்ல!


இப்றாஹீம் ரைஸி மற்றும் அவருடன் மரணித்த அனைவரையும் இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்!


Ashroff Shihabdeen


No comments

Powered by Blogger.