Header Ads



வங்கியில் புகுந்து 3 நாட்கள் தங்கியிருந்த திருடன் - ஏற்கனவே வங்கியிலும், தபாலக பெட்டகங்களிலும் திருடியது அம்பலம்


ஜால பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றை உடைத்து மூன்று நாட்கள் அங்கு இரகசியமான தங்கியிருந்து பணம் மற்றும் தங்கத்தை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வெசாக் பண்டிகையை முன்னிட்டு வங்கி விடுமுறையின் போது சந்தேக நபர் சுவரை உடைத்து வங்கிக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


அங்கு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் திருடப்பட்டதுடன், வங்கியின் சிசிடிவி கமரா அமைப்பும் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார தெரிவித்தனர்.


தங்கத்தை கொள்ளையடித்த பின்னர் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல இரவு நேர விடுதி ஒன்றிற்கு அருகில் 11,200 மில்லி கிராம் போதைப்பொருளுடன் சந்தேக நபர்களை 48 மணிநேரத்திற்குள் கைது செய்ய பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


வென்னப்பு பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றினுள் புகுந்து 06 கோடி பெறுமதியான தங்கம் மற்றும் நாடுமுழுவதும் உள்ள தபால் நிலையங்களின் பெட்டகங்களையும் இந்த நபர் திருடிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், வங்கியில் திருடப்பட்ட சுமார் 500 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள், பெட்டகங்கள், சுத்தியல், அன்றைய தினம் அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.


மேலும் சந்தேகநபர் திருட்டுக்கு பயன்படுத்திய சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.