Header Ads



3 பேர் வெட்டிப் படுகொலை - உறவுக்கார திருடன் அகோரம்


மீரிகம, கித்தலாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இன்று -19- காலை மூவரை கொலை செய்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவத்தில் 78 வயது முதியவர், 80 வயதுடைய வயோதிப பெண் மற்றும் அவர்களது விசேட தேவையுடைய  42 வயது மகன் ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.


கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவரை நால்ல பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மீரிகம, கித்தலாவல பிரதேசத்தில் இன்று அதிகாலை விசாரணைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்குள்ள வீதியொன்றில் துவிச்சக்கரவண்டியை தள்ளிச் சென்ற நபரொருவரை அவதானித்துள்ளனர்.


சுமார் 40 வயதான குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் எழுந்த நிலையில் ,பொலிஸார் அவரைச் சோதனையிட்டதில், அவரிடம் இருந்த பணம், தங்க நகைகள் மற்றும் 78 வயதுடைய நபரின் தேசிய அடையாள அட்டை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.


அவர் வேறு ஒருவரின் அடையாள அட்டையை வைத்திருந்தார் என்ற சந்தேகம் காரணமாக அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியைக் கண்டறிய பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.


பின்னர் அந்த வீட்டை சோதனையிட்டபோது, ​​3 பேரின் உடல்கள் காணப்பட்டுள்ளன.


சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை வீட்டின் உரிமையாளரான 78 வயதுடைய நபருடையது எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இதன்படி, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த குடும்பத்தின் நெருங்கிய உறவினரான இவரே மூன்று கொலைகளையும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடிப்பதற்காக தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரின் கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.