Header Ads



பாரியளவிலான காலணி மோசடி - 35 பில்லியன் ரூபா வருமானம் இழப்பு


வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட காலணிகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்யும் பாரியளவிலான காலணி மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


உரிய வரியை செலுத்தாமல் சில சுங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு ஜோடி காலணிக்கு குறைந்தது 2000 ரூபா வரி அறவிடப்படுகிறது.


எனினும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாதணிகளை விட இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பாதணிகள் மிகவும் குறைந்த விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் காரணமாக வருடாந்த 35 பில்லியன் ரூபா வரி வருமானத்தை நாடு இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.