Header Ads



முதல் ஹஜ் குழு, இலங்கையிலிருந்து மே 21 பயணம் - 26 முகவர்களுக்கே அனுமதி - 3500 பேருக்கு வாய்ப்பு


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்­தி­யா­கி­யுள்­ள­தா­கவும், 68 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது விமானம் எதிர்­வரும் 21ஆம் திகதி புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ள­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.


மேலும் இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளு டன் சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்லும் இறுதி விமானம் ஜூன் மாதம் 9ஆம் திக­திக்கு உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.


இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து 3500 பேர் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­ள­வுள்­ளனர். இவ்­வ­ருடம் 93 ஹஜ் முக­வர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அனு­மதிப் பத்­திரம் வழங்­கி­யுள்­ள­துடன் 3500 ஹஜ் கோட்­டாவும் பிரித்து வழங்­கப்­பட்­டுள்­ளது.


சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சின் சட்ட விதி­க­ளுக்கு அமைய முக­வ­ரொ­ருவர் 100 க்கு மேற்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளையே அழைத்துச் செல்ல முடியும். இத்­தொ­கைக்கு குறை­வாக அழைத்துச் செல்ல முடி­யாது. இந்த விதிக்­க­மைய 26 முகவர்களின் கீழ் ஹஜ் முகவர்கள் ஒன்றிணைந்து 3500 ஹஜ் யாத்திரிகர்களையும் அழைத்துச் செல்கின்றனர்.- Vidivelli

No comments

Powered by Blogger.