Header Ads



காஸாவில் 13,000 பேரை காணவில்லை


பிபிசி அரபு சேவை -


ஒருபுறம் காஸாவில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், மறுபுறம் 13,000த்திற்கும் மேற்பட்ட காஸா மக்கள் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


இவர்களில் பலரும் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், பல மனிதநேய சேவை குழுக்களும், அவர்கள் வலுக்கட்டாயமாக இங்கிருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.


காஸா சுகாதார அமைச்சகம், இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐத் தாண்டியுள்ளதாகக் கூறுகிறது. இந்த எண்ணிக்கை மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் அடிப்படையிலானது.


படக்குறிப்பு, போர் தொடங்கியதற்கு பிறகு காஸா மக்கள் மற்றும் ஹமாஸ் வீரர்கள் உட்பட 13,000 பேர் எந்தவித தடயமும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக, யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.


No comments

Powered by Blogger.