பாராளுமன்றத் தேர்தலுக்கு நிதியில்லை - ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே 1000 கோடி ஒதுக்கீடு
பொதுத்தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லையெனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல். ரட்ணாயக்க இதுபற்றி தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலுக்காக மட்டும் 1,000 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி முழுக்க முழுக்க ஜனாதிபதி தேர்தலை நடத்தும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தல் நடத்துவதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாது. ஜனாதிபதியால் மட்டுமே இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேவேளை, முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென அண்மையில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment