Header Ads



நாடளாவிய ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த சில முஸ்லிம் மாணவர்கள்


2023 (2024) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய அனைத்து  பிரிவுகளிலும் அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.


கலைத்துறை, வணிகவியல், உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், உயிர் முறைமைகள் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பம் ஆகிய துறைகளில் மாணவர்கள் சாதித்துளள்னர்.


இதன்படி, அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடத்தை பெற்ற மாணவர்களில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய சில மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


பொறியியல் தொழிநுட்ப பாடப்பிரிவில் மட்டக்களப்பு இந்து கல்லூரியைச் சேர்ந்த அஹமட் சகீர் மொஹமட் சப்வான் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.


பொறியியல் தொழிநுட்ப பாடப்பிரிவில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் செல்வச்சந்திரன் ஶ்ரீமான் 10 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.


உயிர் முறைமைகள் தொழிநுட்ப பாடப் பிரிவில் 7 ஆம் இடத்தை கெகுனகொல்ல முஸ்லிம் மஹா வித்தியாலயத்தை சேர்ந்த ஹுசைன் பாருக் பாத்திமா அமீனா பெற்றுள்ளார். 


உயிர் முறைமைகள் தொழிநுட்ப பாடப் பிரிவில் 9 ஆம் இடத்தை வெயாங்கொடையை சேர்ந்த மொஹமட் அசார் அஸ்மா ஹைமான் பெற்றுள்ளார்.

No comments

Powered by Blogger.