Header Ads



வயது ஏற, இயலாமை தெரியவர - டக்ளஸின் திடீர் அறிவிப்பு


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.


“நான் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலில் நீரோட்டத்துக்கு பல்வேறு தடைகளைக் கடந்து வந்தவன்.


தமிழ் மக்களின் அரசியல் அன்றாடப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை எனது அரசியல் காலத்தில் முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு.


துரதிஷ்டவசமாக எனக்கு கிடைத்த ஆசனங்கள் போதாமையால் தெற்குடன் பேரம் பேசும் சக்தியை மக்கள் வழங்கவில்லை.  


தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க வேண்டுமே என்ற நினைப்பு மட்டும் எனக்கு இருக்கிறது மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை.


நான் கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைத்திருந்தேன் ஆனால் சில விடயங்களை தொடக்கி விட்டேன் முடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அரசியலில் ஈடுபட்டேன்


ஆகவே எனக்கும் வயது சென்று கொண்டிருக்கிறது உடல் இயலாமை தெரிகிறது அதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார். 

1 comment:

  1. ஐயா கடற்தொழிலில் என்ன சிறிய திட்டங்களை எடுத்தாலும் எனக்கு என்ன கிடைக்கும் எனது கமிசனை முதலில் கொண்டுவாரும் என்ற 'சமூக சேவையில்' நீர் மிகவும் யோக்கியவான் என உமது தேர்தல் தொகுதியில் வாழும் அத்தனை மக்களும் புலம்புகின்றனர். இந்த மக்கள் சக்திக்கு முன்னால் உமக்கு தொடர்ந்தும் தாக்கு பிடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டமைதான் உமது முடிவின் இரகசியம் என்பதை அத்தனை வாக்களார்களும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர். சுருங்கக் கூறின் நீர் குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர் என்ற கதைதான்.

    ReplyDelete

Powered by Blogger.