பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் அல்ல புதிய வேட்பாளரே களமிறக்கப்படுவார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அல்ல. புதிய வேட்பாளரே களமிறக்கப்படுவார் என முன்னாள் ரஷ்யவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
"மொட்டுக் கட்சியின் வேட்பாளர் ரணில் அல்ல என்பது அவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றுமொரு கட்சி, கூட்டணியில் தான் ரணிலுக்கு களமிறங்க வேண்டி வரும்.
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தம்மிக்க பெரேரா இன்னும் உள்ளார். பசில், நாமல் ஆகியோருடன் அவர் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மொட்டுக் கட்சி விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்காததால், இது பற்றி ஜனாதிபதி ரணிலுக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளுள் பசில் ராஜபக்சவுடனேயே இந்தியாவுக்குக் கௌரவமான உறவு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
Post a Comment