இஸ்ரேலின் படுகொலைகளை மறைக்க அனுமதிக்கக் கூடாது
இஸ்ரேலின் படுகொலைகளை மறைக்க அனுமதிக்கப்படக் கூடாது என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.'
காஸா பகுதியில் போர்நிறுத்தம் மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு துருக்கி தொடர்ந்து பணியாற்றும் என ரிசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
"காசாவில் நிகழ்த்தப்பட்ட அதன் அட்டூழியங்கள் மற்றும் படுகொலைகளை மறைக்க இஸ்ரேலிய நிர்வாகத்தின் முயற்சிகள் அனுமதிக்கப்படக் கூடாது" என்று துருக்கிய ஜனாதிபதி அங்காராவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தனது ஜேர்மன் பிரதிநிதியான பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருடன் ஒரு கூட்டு மாநாட்டின் போது கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் வாழ்க்கையை நீடிக்க தனது சொந்த குடிமக்களின் பாதுகாப்பை மட்டுமல்ல, முழு பிராந்தியத்தின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார் என்று அவர் கூறினார்.
Post a Comment