Header Ads



கொழும்பில் குவியும் சீன வெங்காயம்


வெங்காய ஏற்றுமதி தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளதால், சீனாவில் இருந்து பெரிய வெங்காயம் இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், ஒரு சீன பெரிய வெங்காயத்தின் எடை அரை கிலோவுக்கும் அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.


இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயம் கிடைக்காததால், பாகிஸ்தான் மற்றும் துருக்கியில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது, தற்போது, ​​சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் புறக்கோட்டை மொத்த சந்தைகளில் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு பெரிய வெங்காயம் சுமார் 500 கிராம் என்றும் அதில் திரவ தன்மை அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். சீன வெங்காயம் உணவு அலங்கரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


சீன வெங்காயம் ஒரு கிலோ 320 முதல் 350 ரூபா வரையிலும், பாகிஸ்தான் வெங்காயம் ஒரு கிலோ 500 ரூபாவுக்கும் , ஒரு கிலோ துருக்கி வெங்காயம் 420 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும், துருக்கிய வெங்காயம் சின்ன வெங்காயத்தை விட சற்று பெரியது, மேலும் அதன் காரமான தன்மை காரணமாக, நுகர்வோர் அவற்றை அதிகம் கொள்வனவு செய்வதாகவும் காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.