Header Ads



கட்டுநாயக்க விமான நிலையத்திலும், கொழும்பு துறைமுகத்திலும் உயர் தொழில்நுட்ப ஸ்கேன் இயந்திரங்கள்


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேன் இயந்திரங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.


வெளிநாட்டவர்கள் மூலமாக இலங்கையில் பரவும் வைரஸ் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலைமைகளை கண்காணிப்பதற்காகவே இந்த ஸ்கேன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.


இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்  MIZUKOSHI Hideaki துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வாவிடம் இவற்றை கையளித்துள்ளார்.


இதனை தவிர, புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான சர்வதேச அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், முழு உடல் ஸ்கேனர்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டு ஸ்கேனர்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.


அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் 150 அலகுகளைக் கொண்ட மலசலகூட அமைப்பும் நிறுவப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.