அல்குர்ஆன் பற்றிய கனவுகளை சுமந்தவர், குருதிப் புற்று நோயினால் அல்லாஹ்விடம் சென்றார்
தான் அல்குர்ஆனை மனனமிட்டபின், அதனை அழகாக பாராயணம் செய்கின்ற அல்காரி ஆகிப் பின் ஆலிம் ஆக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்த அவர் குருதிப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு நோன்புப் பெருநாளிற்கு அடுத்த நாள் வஃபாத் ஆகியுள்ளார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!
அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த அவரையும் அவரது முஅல்லிமையும் தான் வாக்களித்த படி அழைத்துக் கொண்டு புனித ரமழான் மாதம் உம்ரா சென்றிருக்கிறார் மகாமடி அல்தாஃப் பேக்கரி உரிமையாளர் அல்ஹாஜ் ஸலீம் அவர்கள்.
புனித மக்காவில் நோய் அறிகுறிகள் தென்பட்டு சுகவீனத்துடன் மதீன மாநகரும் சென்று நாடு திரும்பி சிகிச்சை பெற்ற நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மீண்டுள்ளார்!
அல்லாஹ்வின் கலாமை மனனமிடுவதும், அழகிய தொனியில் பாராயணம் செய்வதும் பின் ஆலிம் ஆவதுமாக சிறுவயது முதலே கனவு கண்ட அந்த ஆன்மா அல்லாஹ்விடம் மீண்டுள்ளது.
அவரது இழப்பால் துயருற்றிருக்கும் பெற்றார் உடன்பிறப்புக்கள் உறவுகள் அனைவருக்கும் மன அமைதியையும் பொறுமையையும் அல்லாஹ் தருவானாக!
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
19.04.2024
Post a Comment