Header Ads



இன்று நள்ளிரவு முதல் விலை குறைக்கப்படவுள்ள பொருட்களின் விபரம்


புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.


அதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கமைய 1 கிலோ செத்தல்  மிளகாய் 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாவாகும்.


சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.


அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.


1 கிலோ வௌ்ளைபூடு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 680 ரூபாவாகும்.


1 கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.


அத்துடன் சிகப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்கவும் லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.