Header Ads



தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்


இந்த பிராந்தியத்தில் சிடி ஸ்கேனர்(CT SCANNER ) உள்ள வைத்தியசாலைகளில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை எமக்கு மிகவும் அண்மித்ததாக உள்ளது. இவ்வைத்தியசாலையில் ஸ்ட்ரோக் அதாவது பக்கவாதம்(Stroke) ஏற்பட்டவர்களுக்கான ஒரு விசேட பிரிவு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.(Stroke unit )

பக்கவாதம் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்தினுள் இப்பிரிவுக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு மிகச் சிறப்பாக வெற்றிகரமான சிகிச்சை நடைபெற்று வருகின்றது.


உங்கள் குடும்பத்தவர்கள் நண்பர்கள் அறிந்தவர் தெரிந்தவர் அயலவர் எவருக்காவது உடலின் ஒரு பக்கம் செயலிழப்பதாக அறிந்தால் அவர்களை தாமதிக்காது உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாகவே கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளுங்கள்.


ஏனெனில் மூளையில் ஏற்படும் இரத்தக் கசிவினை கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்களினுள் அடையாளம் காணும்பொழுது மட்டுமே இவர்களுக்கு அந்த உயரிய சிகிச்சையை வழங்க முடியும்


சிறுசிறு வைத்தியசாலைகளுக்கோ அல்லது உங்களது குடும்ப வைத்தியரிடமோ கொண்டு சென்று அங்கிருந்து கல்முனை வடக்கு ஆதரவைத்தியசாலைக்கு நோயாளியை இடம் மாற்றம் செய்யும்பொழுது கால தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 


காலதாமதம் இவர்களுக்கான சிகிச்சையை இல்லாமல் ஆக்கி விட முடியும்.


எனவே தயவு செய்து இந்த செய்தியினை முடியுமான அளவுக்கு பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கவும்.


M.I.Umar Ali RN

BSc(Hons),LLB

ICNO

BH Nintavur.

No comments

Powered by Blogger.