தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (04) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கிராம சேவகராக இருந்து மறுசிராவான இந்த நபர் ஒரு மிகச் சிறிய குழுவைக்கூட வழிநடாத்தத் தகுதியற்றவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் ஏற்கனவே நீதிமன்றம் இந்த நபரைக்குற்றவாளியாகக் கண்டு தண்டப் பணம் செலுத்துமாறு கட்டளையிட்டும் அதனைச் செலுத்தாது தான் நேரடியாக தொடர்புபட்ட இந்த படுகொலையை மற்றொருவரின் மீது பலிசுமத்த முயன்று இந்த நாட்டு மக்கள் அனைவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார். யதார்த்தம் என்னவெனில் எப்போதோ சிறை செல்ல வேண்டிய இந்த நபர் ஏன் இன்னமும் வௌியில் உளரிக் கொண்டிருக்கின்றார் என்பது புரியவில்லை.
ReplyDelete