ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவது சவால்மிக்கது, ஏனையவர்கள் கோபித்துக் கொள்வார்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை தம்மால் பெயரிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை பெயரிடுவது மிகவும் சவால் மிக்க விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமித்தால் அந்தப் பதவிக்கான கனவில் காத்திருக்கும் ஏனையவர்கள் தன்னுடன் கோபித்துக் கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கட்சியின் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மத்திய செயற்குழுவினால் தீர்மானிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.
Post a Comment