Header Ads



முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டிய விடயம்


கலாபூஷணம் ஏ.ஸீ.ஏ.எம்.புஹாரி (கபூரி)


இலங்கைத் திரு­நாட்டில் பௌத்தர், கி21றிஸ்­தவர், இந்­துக்கள், முஸ்­லிம்கள் என்ற நான்கு மதத்­தி­னரும் ஒரு தாய் பெற்ற சகோ­த­ரர்­க­ளா­கவே வாழ்ந்து வந்­தனர். இடைக்­கி­டையே சில மனக்­க­சப்­புக்கள் ஏற்­பட்ட போதிலும் சக­ல­தையும் மறந்து ஒற்­று­மை­யாக வாழ்ந்­துள்­ளனர்.


சமீப காலங்­க­ளாக பெரும்­பான்மை, சிறு­பான்மை என்ற பேதங்கள் ஏற்­பட்டு பெரும்­பான்மைச் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் துவேஷ மனப்­பாங்கை வெளிக்­கொ­ணரத் தொடங்­கி­ய­போது சமூ­கங்­க­ளுக்­கி­டையே புரிந்­து­ணர்வு இன்றி ஒவ்­வொரு சமூ­கத்­த­வரும் மற்ற சமூ­கத்தை சந்­தேகக் கண்­கொண்டு பார்க்க ஆரம்­பித்­தனர்.


இந்தச் சிந்­த­னை­க­ளுக்குத் தூப­மி­டு­வ­துபோல் நடந்த நிகழ்­வு­கள்தான் “ஸஹ்ரான்” என்ற சுய­ந­ல­மியின் நட­வ­டிக்­கைகள். இதன் பின்­னர்தான் பெரும்­பான்மைச் சமூகம் சிறு­பான்­மை­யி­னரை அடக்கி ஆளும் சிந்­தனை தோற்றம் பெற்­றது. இத­னால்தான் அளுத்­கம, பேரு­வல, திகன, அம்­பாரை என்று தொடங்கி டொக்டர் ஷாபி வரை துவேஷம் தலை­வி­ரித்துத் தாண்­ட­வ­மா­டிய நாட­கங்கள்.


போதாக்­கு­றைக்கு கொவிட் 19 என்ற அரக்­கனும் தலை­தூக்­கினான். ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களைக் காவு கொண்டான். இதில் பௌத்தம், இந்து, கிறிஸ்­தவம், இஸ்லாம் என்ற வேறு­பா­டுகள் இன்றி சக­ல­ரி­னதும் பிரே­தங்­களை எரிக்க வேண்டும் என்று மெத்­தப்­ப­டித்த மேதா­விகள் சிலர் அர­சுக்கு ஆலோ­சனை வழங்­கி­யது மட்­டு­மன்றி தங்­க­ளது வக்­கிர புத்­திக்கு தீனி­போ­டவும் முனைந்­தனர்.


பொது­வாக நமது நாட்டில் சிலர் தங்­க­ளது உற­வு­களின் பிரே­தங்­களை மண்ணில் புதைப்­பதும், தீயினால் எரி­யூட்­டு­வதும் சாதா­ர­ண­மாக நடை­பெற்று வரும் வேளையில் முஸ்லிம் சமூ­கத்­தினர் மாத்­திரம் தங்­களின் பிரே­தங்­களை மண்ணில் புதைக்க வேண்­டு­மென்றும் இது தங்­களின் மார்க்க அனுஷ்­டா­னங்­களில் ஒன்று என்ற தங்­களின் சம்­பி­ர­தா­யத்தை அனுஷ்­டித்து வரு­கின்­றனர்.

இச்­ச­ம­யத்­தில்தான் ஒரு சிலர் சில முக்­கி­யஸ்­தர்­களின் உள்­ளங்­களில் முஸ்லிம் சமூ­கத்தைப் பழி­தீர்த்துக் கொள்­வ­தற்­கான ஒரு வேண்­டு­கோளை அர­சுக்கு ஆலோ­ச­னை­யாக வைத்­தனர். அர­சி­யல்­வா­தி­களும் தங்­க­ளது கையா­லா­காத தலை­மைத்­து­வத்தை அவர்­களின் உள்­ளங்­களில் ஒழித்­தி­ருந்த வக்­கிர புத்­தி­யையும் வெளிக்­கொண்­டு­வர ஒரு சாத­க­மான சந்­தர்ப்­ப­மா­கவே இதனைக் கரு­தினர். அவர்­களால் எதையும் சொல்­லவோ கட்­ட­ளை­யி­டவோ முடி­ய­வில்லை. மகுடி கேட்ட நாகம் போல் அவர்­களும் அதற்குத் தலை­ய­சைத்துக் கொண்­டி­ருந்­தனர்.


இதனால் பாதிக்­கப்­பட்­டதோ முஸ்லிம் சமூகம் மட்­டும்தான். இந்த அநி­யா­யத்தை நிறுத்­துங்கள் எங்கள் சமூ­கத்தின் பிரே­தங்­களை எம்­மிடம் ஒப்­ப­டை­யுங்கள் என்று அழு­தனர், கெஞ்­சினர். ஏனைய சமூ­கத்­தி­லுள்ள நிதான போக்­கு­டை­ய­வர்­களும், சமா­தான விரும்­பி­களும் வேறு­பா­டு­க­ளின்றி தங்­க­ளது எதிர்ப்பை பல்­வேறு வழி­களில் வெளிக்­கொ­ணர்ந்­தனர்.

செவிடன் காதில் ஊதிய சங்­குபோல் அரசும் அமை­தி­யா­க­வி­ருந்­தது. முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த தலை­மை­களும் தங்­களால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடி­யாது என்று கையை விரிக்கும் அள­வுக்கு வந்து விட்­டனர்.


இருந்­தாலும் துணிச்­ச­லுள்ள சம்­மாந்­து­றையைச் சேர்ந்த ஒரு பெண் வைத்­தியர் முன்­வந்தார். அவ­ரது தந்­தையும் கொவிட் 19 நோயில் இறந்து விட்டார். அவ­ரது ஜனா­ஸாவை எரிப்­ப­தற்­கான முஸ்­தீ­புகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­தன. நமது சமூ­கத்­தி­லுள்ள ஒரு சில தலை­மை­களும் முது­பெரும் சட்­டத்­த­ர­ணி­களும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­களும் அமை­தி­யாக இருந்த வேளையில் இந்தப் பெண் டாக்டர் நீதி­மன்­றத்தை நாட முடிவு செய்தார். அவ­ரது உற­வு­களும், நட்­பு­களும் அவ­ருக்குக் கைகொ­டுத்­தனர்.


அந்த வைத்­தி­யரின் தந்­தை­யான இப்­றாஹீம் ஆசி­ரியர் அவர்­களின் ஜனா­ஸாவை மறு அறி­வித்தல் வரும்­வரை எரிக்­கக்­கூ­டாது என்று நீதி­மன்றம் அவ­ருக்குத் துணை நின்­றது. ஜனாஸா வைத்­தி­ய­சா­லையில் வைத்து பரா­ம­ரிக்­கப்­பட்டு, பாது­காக்­கப்­பட்டு வந்­தது.


இதற்­கி­டையில் விடயம் சர்­வ­தேசம் வரை சென்று விட்­டது. முஸ்லிம் நாடு­களும் ஏனைய நாடு­களும் தங்­க­ளது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி அர­சுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்­பித்­தனர்.


போதாக்­கு­றைக்கு பாகிஸ்­தானின் அன்­றைய பிர­தமர் இம்ரான் கான் இலங்­கைக்கு வந்து உலக முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் அதி­ருப்­தியை தெரி­வித்து இந்­நிலை நீடித்தால் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களில் விரிசல் ஏற்­ப­டவும் வாய்ப்புண்டு என்று அழுத்திக் கூறி­யதும் அரசு தனது முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்ய ஆரம்­பித்­தது. ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­ப­டாது அடக்­கப்­பட வேண்­டு­மென்று ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது. அல்­ஹம்­து­லில்லாஹ்.


காலங்கள் கடந்து விட்­டன. வரு­டங்கள் உருண்­டோடி விட்­டன. தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் ஒரு குரல் ஒரு இளம் அமைச்சர் ஜீவன் தொண்­டமான் ஜனாஸா எரிப்­புக்­காக அரசு மன்­னிப்புக் கேட்க வேண்டும் என்ற ஒரு வேண்­டு­கோளை முன்­வைத்­துள்ளார். இதற்­கான ஆய்­வுடன் கூடிய அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்­றையும் விரைவில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக கூறு­கிறார்.(விடி­வெள்ளி 04.04.2024)


அமைச்சர் ஜீவன் தொண்­ட­மானின் பத்­தி­ரிகைச் செய்­திக்குப் பின்­னர்தான் முஸ்லிம் சமூகம் சார்ந்த சில தலை­மை­களும், சில ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­களும் விழித்துக் கொண்­டார்கள் போலுள்­ளது.


‘‘மன்­னிப்பை ஏற்க முடி­யாது. விரி­வான விசா­ரணை தேவை’’ என்று நான் முந்தி நீ முந்தி என்று அறிக்­கை­களை விடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.(விடி­வெள்ளி 11.04.2024)


சோழியன் குடும்பி சும்மா ஆடுமா? தேர்­தல்கள் வரப்­போ­கி­ற­தல்­லவா? முஸ்லிம் சமூ­கத்தை உசுப்­பேற்ற வேண்­டு­மல்­லவா? கிடைத்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்த ஆரம்­பித்து விட்­டார்கள். பேரங்கள் பேசவும், டீல் பேசவும், சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்­த­லா­மல்­லவா?


நூற்­றுக்­க­ணக்­கான ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­ப­டும்­போது ஏன் பிறந்து இரண்டு மாதங்­களே ஆகாத பால்­மணம் மாறாத ஒரு பச்­சிளம் பால­கனை எரிக்கக் கொண்டு செல்­லும்­போது வராத துணிச்­சலும் ரோஷமும் இப்­போ­துதான் வரு­கி­றது. இத­னை­யெண்ணி அழு­வதா? சிரிப்­பதா?


மஹிந்­தவின் 52 நாள் ஆட்­சிக்­கெ­தி­ராக போர்க்­கொடி தூக்கி கறுப்பு அங்­கியை அணிந்து கொண்டு உச்ச நீதி­மன்றம் சென்று வாதா­டிய தலை­மைகள் இவ்­வி­ட­யத்தில் நீதி­மன்றம் செல்­வதில் அச­மந்தப் போக்­காக இருந்­ததன் மர்மம் என்ன? என்­பது இது­வரை புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது. இப்­போது ஏற்­பட்­டுள்ள துணிவு இவர்­க­ளுக்கு மட்­டு­மல்ல இன்­றைய ஆட்­சி­யா­ள­ரா­க­வி­ருந்த சர்வ அதி­கா­ரமும் கொண்­டி­ருந்த கோத்­தாப­ய­வுக்கும் ஏற்­பட்­டுள்­ளது. இப்­போது அவர் என்ன சொல்­கிறார் தெரி­யுமா?


“ஜனா­ஸாக்­களை அடக்க அனு­ம­திக்க வேண்டு­மென்­பதே எனது நிலைப்­பாடு. அதுவும் கொங்றீட் பெட்­டி­களில் அடக்கம் செய்ய ஆலோ­சித்­தி­ருந்தேன். ஆனால் சுகா­தார அமைச்சின் நிபு­ணர்கள் அதற்கு இடம்­த­ர­வில்லை. பேரா­சி­ரியர் மெத்­த­ிகாவே தகனம் செய்­யப்­பட வேண்டும் என்ற தீர்­மா­னத்தில் உறு­தி­யாக இருந்தார்” என்று தனக்குக் கீழ் உத்­தி­யோகம் பார்க்கும் ஒரு­வரின் ஆலோ­ச­னையை மீற முடி­யாது என சர்­வ­தே­சத்தின் வேண்­டு­கோ­ளுக்கு மதிப்­ப­ளிக்­காத சர்­வா­தி­காரி கோத்­தாபய இப்­போது இப்­படிக் கூறு­கின்றார்.

அது­மட்­டு­மல்ல “அழுத்­கம, பேரு­வல வன்­மு­றை­க­ளுக்கு அரசும் பொறுப்­புக்­கூற வேண்டும்” என சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்ன நீதி­மன்றில் வாதா­டு­கின்றார்.(விடி­வெள்ளி 29.02.2024)


இப்­படி சக­லரும் தங்கள் தவ­று­களை உணர்ந்து பரி­காரம் தேடும் வேளையில் நமது சமூக தலை­மை­களும் நாங்­களும் விழித்துக் கொண்­டு­தா­னி­ருக்­கிறோம் என்­பதை நமது மக்­க­ளுக்கு நினை­வூட்­டிக்­கொண்­டி­ருக்க வேண்­டு­மல்­லவா? அதற்­காக அறிக்கை விடு­கி­றார்­களோ!


“இதே வேளை இவ்­வாறு மன்­னிப்பு வழங்­கு­வதன் மூலம் பல­வந்த தகனம் தொடர்­பாக தாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கக்­கூ­டிய அனைத்து வழி­க­ளையும் அர­சாங்கம் அடைத்­து­விட முயற்­சிக்கி­ற­து” என மனித உரி­மைகள் செயற்­பாட்­டாளர் சிறின் சரூர் தெரி­வித்­துள்ளார். “பல­வந்த தகனம் தொடர்­பாக அர­சாங்கம் மேற்­கொண்ட தவ­றான தீர்­மா­னத்தை வெளிக்­கொ­ணர்­வதை மன்­னிப்பு மூலம் தடுத்­து­விட முடி­யாது. பல­வந்த தகனம் தொடர்பாக கடுமையான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும். அதன் மூலமே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் தடுக்க முடியும்” எனவும் சிறீன் சரூர் தெரிவித்தார். (விடிவெள்ளி 11.04.2024)


இச்­சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி சகல முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும், புத்தி ஜீவி­களும் உல­மாக்கள், பள்­ளி­வாசல் தலை­மைகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஒரே குரலில் பாரா­ளு­மன்­றத்­தி­னுள்ளும், வெளி­யிலும் ஜனாஸா எரிப்பு விட­யத்தில் சகல சமூ­கங்­க­ளையும் சார்ந்த உச்ச நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­களைக் கொண்ட ஒரு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை அர­சாங்கம் நிறுவி இத­னுடன் சம்­பந்­தப்­பட்ட சகல விட­யங்­க­ளையும் வெளிக்­கொண்­டு­வர ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்தால் என்ன?

இத­னைப்­பற்றி சமூ­கத்தை சிந்­திக்க வைப்ப­தும், உற்­சா­கப்­ப­டுத்துவ­துமே இக்கட்டுரையாளனின் நோக்கமாகும். – Vidivelli

No comments

Powered by Blogger.