இஸ்ரேலின் தாக்குதலை கவனிக்காமல், ஈரானின் பதிலடியை மேற்குலகம் கண்டிப்பதாக எர்டோகன் விமர்சனம்
மத்திய கிழக்கில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கமே காரணம் என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
அங்காராவில் நடந்த செய்தி மாநாட்டில் எர்டோகன், டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், பிராந்திய மோதலைத் தூண்டும் நோக்கத்தில் ஆத்திரமூட்டும் செயல் என்று கூறினார். காசாவில் "கொடுமை மற்றும் இனப்படுகொலை" முடிவுக்கு வர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கவனிக்காமல், ஈரானின் பதிலடியை மேற்குலகம் கண்டிப்பதாக எர்டோகன் விமர்சித்தார்.
Post a Comment