வடமாகாண ஆளுநர் பங்குபற்றலில், வருடாந்த இப்தார் நிகழ்வு
மேற்படி இப்தார் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் கிராஅத்துடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது. மேலும் மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) அவர்களின் இஸ்லாமும் நோன்பும் எனும் தலைப்பில் விசேட உரையும் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு மர்யம் ஜும்ஆ பள்ளிவாசலினால் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி அவர்களினால் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு பிரதிகள் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்தாருக்கான அதான் பெரிய மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி அஸ்லம் வழங்கியிருந்தார். இப்தார் மேடை நிகழ்வுகளுக்கு முன்னர் பாடசாலை முன்றலில் மரநடுகை வேலைத்திட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.
மேற்படி வடக்குமாகாண இப்தார் நிகழ்வில் வடக்குமாகாண கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் அதிகாரிகள், கலாசாரத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், அரச அதிகாரிகள், யாழ் மாவட்ட முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர், யாழ் மாவட்ட பள்ளிவாயில்களின் நிர்வாக உறுப்பினர்கள், உலமாக்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர், யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலய அதிபர், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலைகளின் நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இளைஞர் கழக பிரதிநிதிகள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், யாழ் முஸ்லிம் வர்த்தக பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் மாற்றுமத தமிழ் மற்றும் கிருஸ்தவ சகோதரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
தகவல்
என்.எம்.அப்துல்லாஹ்
Post a Comment