Header Ads



ஹிஜாப் விவகாரம் - அமெரிக்க நீதிமன்றத்தின் அதிடிரத் தீர்ப்பு


ஹிஜாப் விவகாரத்தில் தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடந்த இஸ்லாமிய பெண்கள் இருவருக்கு நியூயார்க் நகர நிர்வாகம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.


கடந்த 2018ல் ஜமிலா கிளார்க் மற்றும் அர்வா அஜீஸ் ஆகிய இரு பெண்கள் தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடந்தனர். மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளினில் புகைப்படம் பதிவு செய்யும் முன்னர் ஹிஜாப்களை அகற்றுமாறு பொலிசார் அவர்களை கட்டாயப்படுத்திய சம்பவம் தங்களை அவமானப்படுத்தியதாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.


2017ல் பாதுகாப்பு உத்தரவை மீறியதற்காக இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அது உண்மைக்கு புறம்பானது என்றே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜமிலா கிளார்க் தெரிவிக்கையில், ஹிஜாப் அகற்றுமாறு கட்டாயப்படுத்தியது, தம்மை முழு உடல் சோதனைக்கு உட்படுத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ளார்.


தாம் அனுபவித்த அந்த உணர்வுகளை வார்த்தைகளால் தம்மால் விவரிக்கவும் முடியவில்லை என்றார். இந்த நிலையில், பொலிஸ் ஆவணங்களுக்காக புகைப்படம் பதிவு செய்யும் போது ஹிஜாப் அணிந்திருக்கலாம் என 2020ல் நியூயார்க் காலல்துறை அனுமதி அளித்தது.


ஆனால் முகம் வெளிப்படையாக தெரியும் மட்டும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. இந்த வழக்கில் தற்போது 17.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடாக வழங்க நியூயார்க் நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.


இந்திய மதிப்பில் சுமார் ரூ 145 கோடி என்று தெரிய வந்துள்ளது. இதில் 13.1 மில்லியன் சட்ட விவகார கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,600 பேர்களுக்கும் அதிகமெனில் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தற்போது பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 7,824 டொலர் மற்றும் 13,125 டொலர் தொகை இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இதில் 2014 மார்ச் மாதம் முதல் 2021 ஆகஸ்டு மாதம் வரையில் ஹிஜாப் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டு பெறும்வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.