குவைத்தில் இலங்கையர்களின் மனிதாபிமான செயற்பாடு
குவைத்தின் மத்திய இரத்த வங்கி உயிர்காக்கும் இரத்த தானம் ஒன்றை அவசரமாக ஏற்பாடு செய்ய அவசர உதவியைக் கோரியிருந்தது
குறுகிய காலத்திற்குள், ஜப்ரியா இரத்த வங்கியின் ஒருங்கிணைப்பில் 12.04.2024 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையானது குவைத்தில் உள்ள கீழுள்ள நான்கு முக்கிய இலங்கை சமூக சேவை நிறுவனங்களுக்கு இரத்த வங்கி மூலமாக அனுப்பப்பட்டிருந்தது.
1. இக்ரா இஸ்லாமிய சங்கம் (IIC)
2. குவைத் அவசர உதவி மையம் (KEHS)
3. குவைத் நாட்டு வீரர்களின் ஒன்றியம் (KUCH)
4. சைலானீஸ் உதவும் கரங்கள் குவைத் (SHHK)
விஷேட குடும்ப நல வைத்தியர். மொஹமட் நவ்ரஸ் குழுக்களுக்கு விலைமதிப்பற்ற ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதலை வழங்கியது மட்டுமல்லாமல் நிகழ்வின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
குறுகிய அறிவிப்பு மற்றும் பண்டிகை காலங்களாக இருந்தபோதிலும், நூற்றுக்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் முன்வந்து இரத்ததானம் செய்ததன் விளைவாக, 94 பைண்ட்கள் இரத்தம் தானமாக பெறப்பட்டது.
இங்கு முக்கிய குறிப்பிடத்தக்க விடயம், இரத்த வங்கியின் ஆரம்ப எதிர்பார்ப்பான 50 பைண்டுகளைவிட கிட்டத்தட்ட இரு மடங்காக இரத்தம் வழங்கப்பட்டு இருந்தமை என்பதாகும்.
நன்கொடையாளர்களில் 95% க்கும் அதிகமானோர் இலங்கைப் பிரஜைகள் என்பதும், எஞ்சிய நன்கொடையாளர்கள் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாங்கள் இச்சந்தர்ப்பத்தில் முதலாவதாக குவைத்தின் மத்திய இரத்த வங்கி மற்றும் அதன் ஊழியர்களுக்கும், அடுத்ததாக உதவிக்கான அழைப்பிற்கு பதிலளித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் எங்கள் சமூக சேவை நிறுவனங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்கூறிய இலங்கையின் நலன்புரி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஊடக குழு மற்றும் பிற தன்னார்வத் தொண்டர்கள் உடல் ரீதியாகவும் மற்ற திறன்களிலும் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலங்கையர்களாகிய நாம் இனம், மதம் மற்றும் தேசியம் என்ற தடைகளைத் தாண்டி இந்த மனிதாபிமான நோக்கத்திற்காக ஒன்றிணைந்து, மனித குலத்திற்கு சேவை செய்வதில் எங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்த தையிட்டு மிகவும் மகிழ்சி அடைகின்றோம்.
வாழ்க்கையின் சிறந்த பரிசை வழங்குவதன் மூலம், நாங்கள் குவைத் நாட்டுக்கு எமது நன்றியுனர்வை காட்டுவது மட்டுமல்லாமல், இரத்தத்திற்கு எல்லைகள் இல்லை என்பதை உணர்ந்து, அனைத்து நாட்டினருக்கும் எங்கள் ஆதரவை வழங்கியமையை இட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.
தகவல்:
எஸ்.எம். அரூஸ்
தலைவர்
சைலானீஸ் உதவும் கரங்கள் குவைத்.(SHHK)
Post a Comment