Header Ads



மோடியின் மிகக் கேவலமான, சீழ்பிடித்த நாற்றப் பேச்சு


காங்கிரசின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த மோடி, அதில் “முஸ்லிம் லீகின் தன்மை” இருப்பதாக மத அடிப்படையில் கூறினார்.


இப்போது இந்தியா கூட்டணியின் இரண்டு தலைவர்கள் இறைச்சி சாப்பிடுவதையும் மீன் சாப்பிடுவதையும் ஒளிப்பேழைகளாக வெளியிட்டுள்ளனர். 


அவற்றைக் குறித்து விமர்சித்த மோடி, “இது அவர்களின் முகலாய சிந்தனை” என்கிறார்.


முஸ்லிம் வெறுப்புப் புரையோடிப் போயிருக்கும் ஓர் இழிமனத்தின் வெளிப்பாடுகள் இவை.


காங்கிரசின் தேர்தல் அறிக்கையை எவ்வளவு காட்டமாக வேண்டுமானாலும் மோடி விமர்சிக்கட்டும்- அதில் ஏன் முஸ்லிம் லீகை வம்புக்கு இழுக்கிறார்?


முஸ்லிம் லீக் ஒன்றும் பாஜகவைப் போல மதவாதக் கட்சி அல்ல.


 பிளவு அரசியலை முன்னிலைப்படுத்தும் கட்சியும் அல்ல.


 வழிபாட்டுத் தலைங்களை இடிப்பதை ஆதரிக்கும் கட்சியும் அல்ல.


மாறாக, சமூக நல்லிணக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் கட்சி முஸ்லிம் லீக்.


அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். 


ஆனால் லீகின் நல்லிணக்கச் சிந்தனையை எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாது.


எந்த அளவுக்கெனில், 


பிரச்சினை வேண்டாம் எனும் நோக்கில், அயோத்தி ராமர் கோவிலைக்கூட ஆதரிக்கும் அளவுக்கு நல்லிணக்கம் பேசும் கட்சிதான் முஸ்லிம் லீக் என்பதை மோடி அறியாமல் இருப்பாரா என்ன?


பிறகு ஏன் “முஸ்லிம் லீக் தன்மை” என்று விமர்சிக்கிறார்?


வேறென்ன, இதயம் முழுக்கப் புழுத்துப் போயுள்ள  முஸ்லிம் வெறுப்பு அரசியல்தான்.


அடுத்து, இந்தியா கூட்டணித் தலைவர்கள் இறைச்சியோ மீனோ சாப்பிடுவது முகலாய சிந்தனையா?


என்ன அபத்தம் இது?


எந்த முகலாய மன்னர் மண்ணறையிலிருந்து எழுந்து வந்து, ராகுலையும் அகிலேஷையும் பார்த்து, “இறைச்சியும் மீனும் சாப்பிடுங்கள்” என்று சொன்னார்?


உண்மையான முகலாய சிந்தனை எது தெரியுமா?


இந்துப் பெருங்குடி மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பு அளித்ததுதான் “முகலாய சிந்தனை.”


இந்துமத வழிபாடுகளுக்குக் கண்ணியம் அளித்ததுதான் “முகலாய சிந்தனை.”


“இந்துக்கள் பசுவைத் தெய்வமாக வழிபடுகிறார்கள். ஆகவே உன் ஆட்சியின் போதும் பசுவை அறுக்க அனுமதிக்காதே” என்று தன்  மகனுக்கு அறிவுரை கூறி வழிகாட்டிய பேரரசர் பாபர். 


இதுதான் “முகலாய சிந்தனை.”


அதனால்தான் 800 ஆண்டு காலம் இந்துப் பெரும்பான்மையின் இதயங்களை அன்பால் வென்று முஸ்லிம்களால் ஆட்சி செய்ய முடிந்தது.


இவற்றை எல்லாம் அறியாதவர் அல்லர் மோடி.


தேர்தல் பரப்புரையின் போது மதவாதத்தைக் கையில் எடுப்பது மோடி வகையறாக்களுக்குப் புதிதா என்ன?


சீழ்பிடித்த வகுப்புவாதச் சிந்தனையின் நாற்றப் பேச்சையே நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளார்.


இதில் வேதனைக்குரியது என்னவெனில், முஸ்லிம் லீகை இழிவுபடுத்தி மோடி பேசிய பிறகும்கூட லீக் தலைவர்கள் யாரும் மோடியை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாததுதான்.


அவர்களுக்கும் சேர்த்து நாம் பதிலடி தந்துவிட்டோம்.


அல்ஹம்துலில்லாஹ். 


-சிராஜுல்ஹஸன்

No comments

Powered by Blogger.