ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் மாத்திரமே ஞானசாரரை விடுதலை முடியும்
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், நாளைய தினம் விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள கைதிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொது மன்னிப்பின் கீழ் அவரை விடுவிக்க முடியாது என சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஞானசார தேரரை ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் மாத்திரமே விடுதலை முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாம் மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ஞானசார தேரருக்கு கடந்த மார்ச் 28 ஆம் திகதி நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Post a Comment