உலகின் மிகப்பெரிய பிரமிக்கவைக்கும், மதரஸா கல்வி கட்டமைப்பு ஸமஸ்த கல்வி வாரியம்
கேரளமாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல்தமிழகம், கர்நாடகா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, அந்தமான், லட்சத்தீவு, மற்றும் சவூதிஅரேபியாவில் சில பகுதிகளில், யுஏஇ, ஓமான், கத்தார் நாடுகளிலும் சமஸ்த பாடதிட்டத்தின் கீழ் மொத்தம் 10014 மதரஸாக்கள் இயங்கி வருகிறது.
இந்த 10014 மதரஸாவில் 12 லட்சம் மாணவர்கள் மார்க்க கல்வி கற்று வருகின்றனர் என்பது மற்றொரு பிரமிக்கவைக்கும் தகவல்..
ஸமஸ்த பாடதிட்டத்தில் பயிற்சிபெற்ற சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்களுடன் இயங்கும் உலகின் மிகப்பெரிய மதரஸா கல்வி கட்டமைப்பு ஸமஸ்த கல்வி வாரியம்..
நிர்வாக வசதிக்காக 10014 மதரஸாக்களையும் ஐந்து ரேஞ்ச் எனப்படும் சரகங்களாக பிரித்து முஃபத்திஸ் என்று மதரஸா கல்வி ஆய்வாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்..
ஆண்டுதோறும் ரமலானுக்கு முன்பு ஒரே சமயத்தில் தேர்வுகள் நடத்தப்படுவதோடு பொதுவான தேர்வு மையத்தில் பாதுகாப்பாக பரீட்சை பேப்பர்கள் திருத்தி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதும் சிறப்பான விஷயம்..
சமஸ்த கல்வி வாரியத்தின் இந்த திட்டமிட்ட தேர்வு நடைமுறை கேரள அரசு கல்வி வாரிய அதிகாரிகளை கூட வியப்பில் ஆழ்த்தியது.
தமிழகத்தில் குறிப்பாக குமரி மாவட்டத்தில் சுமார் 25 மஹல்லாக்களில் சமஸ்த பாடதிட்டத்தின்படி மதரஸாக்கள் இயங்கி வருகிறது.. இந்த மதரஸாக்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பல மஹல்லாக்களிலும் சீருடை, ஐடி கார்டு, ஒரே மாதிரியான புத்தகப்பை வழங்கியுள்ளனர்.
தமிழக மாணவர்கள் பயன்படும் வகையில் அரபுத்தமிழில் பாடபுத்தகங்கள் சமஸ்த கல்வி வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் பல மஹல்லாக்களில் மாணவர்களை அழைத்து வர இலவசமாக வாகனவசதி கூட செய்து கொடுத்துள்ளது பாராட்ட வேண்டிய விஷயம்.
_ Azheem _
Post a Comment