Header Ads



"மரத்தில் மாடு கட்டிய நகைச்சுவை தெரிந்தால் சிரித்துவிட்டுச் செல்லுங்கள், தெரியாவிட்டால் இந்நூலை வாசித்துப் பாருங்கள்"



அத்தாஸ் 


சர்­வ­தேச ரீதி­யாக அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­திய ஈஸ்டர் தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் சிவநேச­து­ரை சந்­தி­ர­காந்தன் நூல் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படு­கொலை – இன, மத நல்­லி­ணக்கம் – அறி­தலும் புரி­தலும்’ என்­ப­தாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்­டக்­க­ளப்பில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.


எனினும் தலைப்புக்கேற்­ற­வ­ாறு இந்த நூலின் உள்­ள­டக்கம் அமை­ய­வில்லை என்­பதே இந்தக் கட்­டுரை வலி­யு­றுத்த வரும் செய்­தி­யா­கும்.


இந்த நூலைப் பொறுத்­த­வரை தகவல் மூல­மற்ற செய்­தி­களும் பல குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக இந்த நூலின் பின்னால் அதி­கார சக்­தி­களின் மறை­க­ரங்கள் உள்­ளதா என்ற கேள்வி எழு­கின்­றது.


ஏனெனில், ஈஸ்டர் தீவி­ர­வாதத் தாக்­குதல் இடம்­பெற்ற போது சஹ்­ரானின் புகைப்­ப­டங்கள் மற்றும் காணொ­ளி­களைத் தொலை­பே­சியில் வைத்­தி­ருந்­த­மைக்­காக பல நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்டு பல மாதங்கள் தடுத்­து­ வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஆனால் அவ்­வா­றான எது­வித கெடு­பி­டி­களும் இல்­லாமல் சர்­வ­தேச ரீதி­யாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட சஹ்ரான் எனும் தீவி­ர­வா­தியின் புகைப்­ப­டத்தை முன் அட்­டையில் இட்டு இந்நூல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இங்­குள்ள கேள்வி என்­ன­வெனில், பாது­காப்புத் தரப்­பினர் முஸ்­லிம்­களைக் கைது செய்­தமை போன்று ஏன் பிள்­ளை­யானைக் கைது செய்­ய­வில்லை என்­ப­துடன் அவ­ருக்கு எதி­ராக ஏன் எது­வித சட்ட நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை என்­ப­தாகும்.


மேலும் சஹ்­ரானின் இப் புகைப்­ப­டத்தை இவர் இஸ்­லா­மிய மதத்­திற்கும் அதனைப் பின்­பற்றும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரான குறி­யீ­டாகப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். ஈஸ்டர் தாக்­குதல் இஸ்­லாத்­திற்­காகப் புரி­யப்­பட்ட ஒன்று என்­ப­துடன் அவ்­வா­றான தாக்­கு­தல்கள் இஸ்­லாத்தைப் பின்­பற்றும் முஸ்­லிம்­களால் மேலும் செய்­யப்­பட முடியும் என்ற கருத்தை இந்த நூலின் முன் அட்டை சஹ்­ரானின் புகைப்­ப­டத்தின் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.


மேலும் முக்­கி­ய­மாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்­சி­டப்­பட்ட அச்­ச­கத்தின் வி­பரங்கள் எதுவும் குறிப்­பிடப் பட்­டி­ருக்­க­வில்லை. அவை மறைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக அச்சு மற்றும் வெளி­யீட்டுக் கட்­டளைச் சட்டம் பிரிவு 02இன் படி இது குற்றச் செயல் என்­ப­துடன் பிரிவு 03, இக் குற்­றத்­திற்­கான தண்­ட­னையும் குறிப்­பி­டு­கின்­றது. இந்­நூ­லா­னது குறித்த சட்­டத்தை மீறி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.


ஈஸ்டர் படு­கொலை தொடர்பில் 329 பக்­கங்­களில் நூலை எழு­திய சந்­தி­ர­காந்தன், தன்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதில் வழங்க ஆகக் குறைந்­தது ஒரு பக்­கத்தைக் கூட ஒதுக்­காமல் விட்­டுள்­ளமை மிகப் பெரிய அபத்­த­மாகும்.

குறிப்­பாக இந்­நூ­லா­னது மிகப்­பெ­ரிய பொய்­யொன்றைப் பதிவு செய்­துள்­ளது. பக்கம் 30 இல் “இரண்டாம் தடவை மேற்­கொள்­ளப்­பட்ட உடற் கூற்­றியல் மர­பணுப் பரி­சோ­த­னையில் (DNA) புலஸ்­தி­னியின் மரணம் உறுதி செய்­யப்­பட்­டது” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது திட்­ட­மிட்ட பொய்ப் பிரச்­சா­ர­மா­கவே அமை­கின்­றது. ஏனெனில், புலஸ்­தினி மகேந்­திரன் (சாரா ஜாஸ்மின்) எனும் பெண் 26.04.2019ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது பாது­காப்பு வீட்டில் உயி­ரி­ழந்­தாரா என்­பது தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்­தினால் 03 பரி­சோ­த­னைகள் நடத்­தப்­பட்­டன. இதில் முதல் பரி­சோ­த­னையில் இவ­ரது மரணம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.


இரண்­டா­வது பரி­சோ­த­னை­யிலும் இவ­ரது மரணம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. சுமார் 04 வரு­டங்­களின் பின் 06.04.2023ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட மூன்­றா­வது பரி­சோ­தனை அறிக்­கை­யி­லேயே குறித்த பெண் உயி­ரி­ழந்து விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. உண்மை இவ்­வாறு இருக்க இவர், இரண்­டா­வது பரி­சோ­த­னையில் புலஸ்­தினி மகேந்­தி­ரனின் மரணம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது என்று எழு­தி­யுள்­ளமை ஏன்?


மேலும் பக்கம் 32இல் “நேர­டி­யாக எதிர்­வி­னையை சிங்­கள பௌத்த மக்கள் மீது தொடுத்தால் அதனால் ஏற்­படும் விளை­வுகள் சிறு­பான்மை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை பார­தூ­ர­மாக இருக்கும். அதனால் எதிர்­கொள்ளும் கட்­ட­மைப்பு ஐ.எஸ். குழு­வி­ன­ரிடம் இல்லை. இதனால் பௌத்த விகா­ரைகள் தடுக்­கப்­பட்டு சிங்­கள மக்கள் ஒன்று கூடும் தேவா­ல­யங்கள் குறி­வைக்­கப்­பட்­டன” என்ற கருத்தைப் பதிவு செய்­துள்ளார். இத்­த­கவல் இருட்­ட­டிப்புச் செய்­யப்­பட்ட பொய்­யாகும். ஏனெனில், கொச்­சிக்­கடை அந்­தோ­னியர் தேவா­ல­யத்தில் இறந்­த­வர்­களில் கணி­ச­மா­ன­வர்கள் தமிழ் பேசும் கிறிஸ்­த­வர்கள், மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தில் இறந்­த­வர்கள் அனை­வரும் தமிழ் பேசும் கிறிஸ்­த­வர்கள். அதே­போன்­றுதான் நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்டி தேவா­ல­ய­மு­மாகும். இம் மூன்று தேவா­ல­யங்­களில் இறந்­த­வர்­களில் கணி­ச­மா­ன­வர்கள் தமிழ் பேசும் மக்­க­ளாக உள்­ள­மையை மறைத்து சிங்­கள மக்கள் ஒன்று கூடும் தேவா­ல­யங்கள் குறி­வைக்­கப்­பட்­டன என்ற கருத்தைக் குறிப்­பி­டு­கின்றார்.


ஆனால் தொலைக்­காட்­சி­களில் பேசும் போது இஸ்­லா­மியத் தீவி­ர­வா­திகள் திட்­ட­மிட்டு தமிழ் மக்­களை அல்­லது கிறிஸ்­த­வர்­களைப் படு­கொலை செய்­துள்­ளார்கள் என்று பேசி வரு­கின்றார். ஆக இவரின் இரண்டு கருத்­துக்­களும் ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டு­டை­ய­தாக உள்­ளது. இங்கு சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டிய விடயம் என்­ன­வெனில், ஈஸ்டர் தாக்­கு­தலைத் தொடர்ந்து முஸ்­லிம்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட வியா­பார நிலை­யங்கள் மீதான எரிப்­புக்­க­ளையும் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்­க­ளையும் உயி­ர­ழிப்­புக்­க­ளையும் செய்­த­வர்கள் யார்? அவர்கள் அத்­தனை பேரும் கிறிஸ்­த­வர்­களா?


மேலும் சீயோன் தேவா­லய சபையின் பிர­தம ஊழி­ய­ரான றொசான் மகேசன் என்­பவரின் நேர்­காணல் ஒன்று இந்த நூலில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த நேர்­கா­ணலின் இறு­தியில் பக்கம் 49இல் “முஸ்­லிம்­க­ளுக்குத் தெரியும். அவர்­க­ளுக்குத் தெரி­யாம இது நடக்­கல்ல” என்­பதைத் தொடர்ந்து மூன்று தட­வைகள் சொன்­ன­தாகத் தொடர்ந்து மூன்று தட­வைகள் இந்­நூலில் பதி­யப்­பட்­டுள்­ளன.


இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை. ஏனெனில், இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம், இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன. அச் செய்திகள் தொடர்பில் தகவல் மூலங்களும் இடப்படவில்லை.

இங்­குள்ள கேள்வி என்­ன­வெனில், சீயோன் தேவா­லய சபையின் பிர­தம ஊழி­ய­ரான றொசான் மகேசன் குறிப்­பிடும் முஸ்­லிம்கள் யார்? எல்லா முஸ்­லிம்­களும் ஈஸ்டர் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை அறிந்­தி­ருந்­தார்­களா அல்­லது குறித்த முஸ்லிம் நபர்கள் மாத்­திரம் ஈஸ்டர் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்­தார்­களா? அவர் உறு­தி­யாகக் குறிப்­பிடும் அந்த முஸ்லிம் நபர்கள் யார்? ஈஸ்டர் தாக்­குதல் தொடர்பில் முன்­கூட்­டியே அறிந்து அதனை மறைத்த குற்­றத்தைப் புரிந்த முஸ்லிம் நபர்­க­ளுக்கு எதி­ராக ஏன் இவர் இது­வரை சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை அல்­லது கோர­வில்லை? மேலும் ஈஸ்டர் தாக்­குதல் தொடர்பில் முன்­கூட்­டியே அறிந்த முஸ்லிம் நபர்கள் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­காமல் மறைத்த குற்­றத்­திற்கு பிர­தம ஊழி­ய­ரான றொசான் மகே­சனும் உள்­ளாக்­கப்­ப­டு­வாரா?


றொசான் மகே­சனின் கருத்­தா­னது மிகவும் பாரா­தூ­ர­மான குற்­றச்­சாட்­டாக உள்­ளது. முஸ்­லிம்கள் முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்­தார்கள் என்று குறிப்­பி­டு­வ­தா­னது கிறிஸ்­த­வர்கள் கொல்­லப்­ப­டு­வதை முஸ்­லிம்கள் விரும்­பி­யி­ருந்­தார்கள் என்­ப­தாக அர்த்தம் கொள்­ளப்­ப­டு­வ­துடன் முஸ்­லிம்கள் ஈஸ்டர் படு­கொ­லையைத் தடுக்க விரும்­ப­வில்லை என்­ப­தாக அமை­கின்­றது. இதன் மறு­தலை முஸ்­லிம்கள், மாற்று மதத்­தினர் கொல்­லப்­ப­டு­வதை ஆத­ரிக்­கின்­ற­வர்­க­ளாக உள்­ளனர் என்­ப­தா­கும்.


உண்­மையில் மதிப்­புக்­கு­ரிய றொசான் மகேசன் இக்­க­ருத்தைக் கூறி­னாரா அல்­லது இந்­நூலின் ஆசி­ரியர் சந்­தி­ர­காந்­தன்­இக்­க­ருத்தைப் பதிவு செய்­துள்­ளாரா? நிச்­ச­ய­மாக இக்­க­ருத்­தா­னது கத்­தோ­லிக்க கிறிஸ்­தவ – முஸ்­லிம்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லு­றவினைச் சிதைக்கும் ஆபத்தைக் கொண்­டுள்­ளது. இவ்­வா­றான ஒரு நிலையை உரு­வாக்­கு­வ­தற்­காக இக்­க­ருத்து திட்­ட­மிட்டுப் பதி­யப்­பட்­டுள்­ளதா என்ற பல கேள்­விகள் உள்­ளன.


மேலும் இந்­நூலின் 121ஆம் பக்­கத்தில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது “இந்­தி­யாவில் உள்ள ஹெச்.ஜி. ரசூல் என்ற எழுத்­தாளர் பின்­வ­ரு­மாறு கூறு­கின்றார். இந்த வஹாபி குழு­வினர் உயர்ந்­தது எது? புத்த சாச­னமா? அல்­லது குரானா? என இலங்­கையில் பிரச்­சாரம் செய்து புத்த பிக்­கு­க­ளி­டமும் பொது­ப­ல­சே­னா­வி­டமும் சமய வெறியை ஊட்­டு­வ­தற்குக் கார­ண­மாக அமைந்த அண்­மைக்­கால வர­லாறு நாம் அறிந்­ததே” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதில் ஒரு சில உண்­மைகள் இருந்­தாலும் நூறு வீத உண்­மை­யாகக் கொள்ள முடி­யாது. இங்கு பாரிய இருட்­ட­டிப்­பொன்று செய்­யப்­பட்­டுள்­ளது. பௌத்த பிக்­கு­க­ளுக்கும் பொது­ப­ல­சேனா அமைப்­பிற்கும் மத வெறி ஏற்­படக் காரணம் வஹா­பிசக் குழு­வினர் என்ற கருத்­தா­னது பொது­ப­ல­சேனா இயக்கம் இயல்­பி­லேயே சாந்­த­மான அமைதி போதிக்கும் அமைப்பு என்­பதும் அதற்கு மத­வெறி வரு­வ­தற்குக் காரணம் வஹா­பிசக் குழு­வினர் தான் என்­ப­தா­கவும் உள்­ளது. எனினும் வர­லாற்றை எடுத்து நோக்­கினால், 30 வருட யுத்த காலத்தில் பொது­ப­ல­சே­னாவைப் போன்று பல பௌத்த அமைப்­புக்கள் உரு­வா­கி­யி­ருந்­தன. அவை தமிழர் தொடர்பில் நேர்­மை­யாக நடந்து கொள்­ள­வில்லை என்ற நிலைப்­பாடு தமி­ழர்­க­ளிடம் உண்டு. குறிப்­பாக தனிச் சிங்­கள மொழிச் சட்டம் போன்ற மொழி வெறி பிடித்­த­மைக்கும் கிறிஸ்­தவ மிச­ன­றி­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களின் போது மத­வெறி பிடித்­த­மைக்கும் காரணம் இந்த வஹா­பிச குழு­வினர் அல்ல. 1900 ஆண்­ட­ளவில் கிறிஸ்­தவ மிச­ன­றி­க­ளுக்கு எதி­ரா­கவும் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் பௌத்த தேசிய­வாத அமைப்­புக்கள் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளன. அவ்­வா­றான தாக்­கு­தல்­க­ளுக்கு கிறிஸ்­தவ மிச­­னறி­களின் அடிப்­ப­டை­வா­தமே காரணம் என்று குற்றம் சுமத்த முடி­யுமா? ஒரு­போதும் இல்லை. அது தவ­றான வாத­மாகும்.


இலங்­கையைப் பொறுத்­த­வரை சிங்­கள பௌத்த தேசி­ய­வாதம் நன்கு கட்­ட­மைக்­கப்­பட்ட ஒன்­றாக இருந்து வரு­கின்­றது. ஆரம்­பத்தில் அதன் எதி­ரி­யாக கிறிஸ்­த­வர்கள் இருந்­தார்கள். 1915 சிங்­கள – முஸ்லிம் கல­வ­ரத்தின் போது முஸ்­லிம்­களின் வர்த்­தகம் மறை­முகக் கார­ணி­யாக இருந்­தது. பின்னர் 1956களில் சிங்­கள மொழி – பௌத்த மத மறும­லர்ச்­சி­யாக மாறி­யது. பின்னர் 1970களில் தமி­ழர்­களின் ஆயுதப் போராட்­டத்தின் போது அது பௌத்த இன­வா­த­மாக வடிவம் கொண்­டது. குறிப்­பாக 2009 யுத்­தத்தின் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பௌத்த பேரினவா­த­மாக அது வடிவம் கொண்­டுள்­ளது. பொது­ப­ல­சேனா போன்ற பௌத்த இயக்­கங்­களின் உரு­வாக்கம் அதன் ஸ்தீரம் என்­பது பூகோள மற்றும் தேசிய அர­சியல் சக்­தி­களின் மறை­கரம் என சர்­வ­தேச ரீதி­யாக அறி­யப்­பட்ட கலா­நி­திகள் பேரா­சி­ரி­யர்கள் மிகப் பெரிய ஆய்­வு­களை வெளி­யிட்­டுள்ள நிலையில் வரலாற்றை இருட்­ட­டிப்புச் செய்து மொட்டைத் தலைக்கும் முழங்­காலும் முடிச்சுப் போடும் இது­போன்ற பல கதைகள் இந்­நூலில் அதிகம் உள்­ளன.


எனினும் இந்­நூலில் பக்கம் 121 – 122 இல் மிக முக்­கிய விடயம் ஒன்றைப் பதிவு செய்­துள்ளார் நூலா­சி­ரியர் சந்­தி­ர­காந்தன். சிங்­கள மக்­களை மையப்­ப­டுத்தி ஏன் இந்த தஃவா தேவைப்­பட்­டது? இந்த தஃவா அமைப்பை முன்­னெ­டுத்­த­வர்கள் தமி­ழக தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்­த­வர்கள். தமிழ் நாட்டில் உள்ள எல்லா இந்­துக்­க­ளுக்கும் இஸ்­லாத்தைச் சொல்­லி­விட்டு அவர்கள் இலங்­கைக்கு வந்­து­விட்­டார்­களா? இலங்கை போன்ற பல்­லின சமூ­கங்கள், பல மதங்கள் உள்ள நாட்டில் இந்த அணு­கு­முறை என்ன விப­ரீ­தத்தை தரப்­போ­கின்­றது என்ற விமர்­ச­னங்­களை நாம் எளிதில் புறந்­தள்­ளி­விட முடி­யாது” என்­கின்றார். இவ்­வி­டயம் மிகவும் முக்­கி­யத்­து­வத்­துடன் முஸ்­லிம்­களால் அணு­கப்­பட வேண்­டி­ய­தாகும். தீவிரப் போக்­குள்ள தவ்ஹீத் நபர்கள் தொடர்பில் முஸ்லிம் சமு­தாயம் மிகவும் அவ­தா­ன­மாக நடந்து கொள்­ள­வேண்­டிய அபாயக் கட்­டத்தில் உள்­ளது.


குறிப்­பாக இலங்­கையில் உள்ள ஒரு சில தவ்ஹீத் அமைப்­புக்­க­ளுக்கும் படை­யி­ன­ருக்கும் இடையில் தொடர்பு இருந்­ததா என்­பது தொடர்பில் ஈஸ்டர் தாக்­கு­தலை விசா­ரணை செய்த பாரா­ளு­மன்ற விசேட குழு பல இடங்­களில் கேள்வி எழுப்­பி­யுள்­ளது. இலங்­கையில் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளான தவ்ஹீத் இயக்­கங்­களின் மூலவேர் இந்­தியா குறிப்­பாக தமிழ் நாட்டில் செயற்­பட்­டு­வரும் சில தவ்ஹீத் இயக்­கங்­க­ளாகும். இங்­குள்ள முக்­கிய கேள்வி என்­ன­வெனில், இலங்­கையில் உள்ள ஒரு சில தவ்ஹீத் இயக்­கங்­க­ளுக்கும் படை­யி­ன­ருக்கும் தொடர்­பி­ருப்­ப­தாக எழுப்­பப்­பட்ட கேள்­வி­களும் சந்­தே­கங்­களும் தமிழ் நாட்டுத் தவ்ஹீத் இயக்­கங்கள் மீதும் எழுத்­துள்­ளன. மேலும் குறித்த தவ்ஹீத் இயக்­கங்­களால் இந்­தி­யா­விலும் இலங்­கை­யிலும் மத நல்­லி­ணக்கம் உரு­வா­னதை விடவும் இனக் குரோ­தமும் மத முரண்­பா­டு­க­ளுமே அதிகம் வளர்ந்­துள்­ளன. ஆக இவ் அமைப்­புக்­களின் செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் ஏதா­வது மறை கரங்கள் உள்­ள­னவா என்ற கேள்வி உள்­ள­துடன் இவர்கள் மத நல்­லி­ணக்­கத்தைக் காட்­டிலும் இனங்­க­ளுக்கும் மதங்­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டான விட­யங்­க­ளையே தூக்கிப் பிடிப்­ப­வர்கள் என்ற குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளாகி வரு­கின்­றமை ஏன்?


மேலும் இந்­நூலின் பக்கம் 125 இல் தப்லீக் ஜமாஅத் எனும் தலைப்பு இடப்­பட்டு அது தொடர்பில் பல விட­யங்கள் எழு­தப்­பட்­டுள்­ளன. பக்கம் 126 இல் குறிப்­பி­டப்­பட்ட முக்­கிய விட­யங்கள் பின்­வ­ரு­மாறு:


“சாதா­ரண முஸ்­லிம்­களை மத­வா­தி­க­ளாக மாற்­று­வதில் பெரும்­பங்கை இவர்­களே வகிக்­கின்­றனர்.


உயிரைக் கொடுப்­ப­வர்­க­ளுக்கு சுவர்க்­கத்தில் பெரிய அந்­தஸ்து உள்­ளது. அப்­ப­டி­யாக உயிரைக் கொடுத்து ஷஹீத் ஆகும் போது நேர­டி­யாக மர­ணித்­த­வுடன் சுவர்க்கம் கிடைக்கும். அப்­ப­டி­யா­ன­வர்­க­ளுக்கு மர­ணத்தின் பின்னர் எவ்­வித விசா­ர­ணை­களும் கிடை­யாது. அவர்­க­ளுக்கு சுவர்க்­கத்தில் வாழ்­வ­தற்கு 72 கன்­னிகள் கிடைப்­பார்கள் என்­ப­தாக கற்­பிப்­பதன் மூல­மாக அல்­லாஹ்வின் பாதையில் செல்­வது என்­பதன் முழு அர்த்­தங்­க­ளையும் புரிந்து கொள்வர் என இந்த தப்லீக் ஜமாஅத் பிரச்­சா­ரங்­க­ளுக்குள் உள்­வாங்­கப்­பட்டு பக்தி மய­மா­ன­வர்­க­ளாக மாறு­கின்ற இளை­ஞர்கள் ‘பீஸ­பீ­லில்லாஹ்’ என்­பதன் முழு அர்த்­த­மான ஜிஹாத் மற்றும் ஷஹீத் போன்­ற­வற்றை நோக்கி செல்லக் கூடிய நில­மைக்கு இட்டுச் செல்­லப்­ப­டு­வார்கள்.


இந்த தப்லீக் ஜமா­அத்­தினர் ஒரு­போதும் ஜிஹாத்­துக்குச் செல்­லுங்கள், இஸ்­லா­மிய ஆட்­சியை உரு­வாக்­குங்கள் என்­கின்ற வஹா­பிச பிரச்­சா­ரங்­களை நேர­டி­யாக மேற்­கொள்­வ­தில்லை.


சஹ்­ரானின் தந்­தையார் முகம்­மது ஹாசிம், தப்லீக் பணி­களில் இணைந்து பங்­காற்­றி­யவர் என்­பது கவனம் கொள்­ளத்­தக்­கது” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


மேலும் முக்­கி­ய­மாக ஈஸ்டர் தாக்­குதல் தொடர்பில் இந்­நூலின் ஆசி­ரி­ய­ரான சந்­தி­ர­காந்தன் மீது அவ­ரது பிரத்­தி­யேகச் செய­லா­ள­ராகப் பல வரு­டங்கள் பணி­பு­ரிந்து வந்த ஹன்சீர் அசாத் மௌலானா என்­பவர் பாரிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருந்தார். இக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான ஆவணம் 05.09.2023 ஆம் திகதி சனல் 04 தொலைக்­காட்­சி­யினால் வெளி­யி­டப்­பட்­டது. எனினும் இக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பதி­ல­ளிக்­காமல் சந்­தி­ர­காந்தன் நழுவிச் சென்­றுள்ளார்.


ஈஸ்டர் படு­கொலை தொடர்பில் 329 பக்­கங்­களில் நூலை எழு­திய சந்­தி­ர­காந்தன், தன்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதில் வழங்க ஆகக் குறைந்­தது ஒரு பக்­கத்தைக் கூட ஒதுக்­காமல் விட்­டுள்­ளமை மிகப் பெரிய அபத்­த­மாகும். பக்கம் 324இல் முடி­வுரை எனக் குறிப்­பிடப்பட்­ட­துடன் அதில் இவ்­வாறு குறிப்­பி­டு­கின்றார். “குறித்த நூல் அச்­சுக்குப் போகத் தயா­ராகிக் கொண்­டி­ருந்த வேளையில் குறித்த ஈஸ்டர் தாக்குதல் பற்றிய புதிய புரளி கலந்த செய்தியொன்று வெளிவந்தது. அதாவது சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய என்னையும் குறித்த தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அப்புரளியானது சர்வதேச ஊடகமான லண்டனைத் தளமாகக் கொண்டிருக்கும் சனல் 04 தொலைக்காட்சியில் 05.09.2023அன்று ஒளிபரப்பாகியுள்ளது” என தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் வெறும் 15 வரிகளில் எழுதியுள்ளமை இந்நூலை வாங்கிய அனைவரையும் ஏமாற்றியதாகவே அமையக் கூடும்.


இந்நூலில் இறுதியாக அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார், “இந்நூலினை ஊன்றி படிக்கின்ற போது சனல் 4 ஊடாக என்மேல் பரப்பப்பட்டுள்ள என்மீதான புரளிகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை வாசகர்களாகிய ஒவ்வொருவரும் நன்கே புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன். அதையும் தாண்டிய ஏதாவது சந்தேகங்கள் உங்கள் மனதில் இருந்தால் சஹ்ரான் தலைமையிலான ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தமது தாக்குதலுக்கு தயாரான போது ஒருமித்து நின்று சத்தியப்பிரமாணம் செய்த காணொளி அதனைத் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறேன்” என நூலை முடித்துள்ளார்.


இந்நூல் தொடர்பில் குறிப்பிட்டுச் சொன்னால், இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை. ஏனெனில், இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம், இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன. அச் செய்திகள் தொடர்பில் தகவல் மூலங்களும் இடப்படவில்லை.


இந்நூலை வாசிப்பதற்கு முன்பு இருந்த ஈர்ப்பும் அவதானிப்பும் வாசித்து முடித்த பின் அப்படியே இல்லாமற் போய்விட்டது. உண்மையைச் சொல்லப்போனால் இந்த நூலை வாசித்து முடித்த போது மரத்தில் மாடு கட்டிய நகைச்சுவை தான் என் ஞாபகத்திற்கு வந்தது. உங்களுக்கும் மரத்தில் மாடு கட்டிய நகைச் சுவை தெரிந்தால் சிரித்துவிட்டுச் செல்லுங்கள். தெரியாவிட்டால் இந்த நூலை வாசித்துப் பாருங்கள்.- Vidivelli

No comments

Powered by Blogger.