பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால்..?
சுயமாக சம்பாதிக்க இயலாத பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால் அவர்களுக்குச் செலவு செய்வதற்கு சலிப்படையாதீர்கள்
அவர்களால் உங்களுக்கு அல்லாஹ் வின் உதவியும் ரிஜ்கும் கிடைக்கும் என்கிறார்கள்
காருண்ய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
நம்முடைய வீட்டில் நிறைய குழந்தைகள் இருக்கலாம்.
வயதான பெற்றோர்கள் இருக்கலாம்.
திருமணம் ஆகாத
அல்லது கணவனை இழந்த, விவாகரத்து செய்யப்பட்ட மகள்களோ சகோதரிகளோ இருக்கலாம்,
பலவீனமான மாமனார் மாமியார்(மனைவியின் பெற்றோர்) ஆதரிப்போர்கள் இன்றி நம்முடன் தங்கியிருக்கலாம்
இவர்களுக்குச் செலவு செய்வதைப் பாரமாக கருதாதீர்கள்.
ஏனென்றால் அவர்களை நீங்கள் பராமரிப்பதால் அவர்களுக்கும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு ரிஸ்க் வழங்குவான்
وعن أبي الدرداء عويمر رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ) ابغوني الضعفاء ، فإنما تنصرون وترزقون بضعفائكم (رواه أبو داود
நபியவர்கள் சொல்கிறார்கள்:
எனக்காக பலவீனமானவர்களுக்கு உதவுங்கள்.
உங்களுக்கு உதவி கிடைப்பதும் ரிஸ்க் வழங்கப்படுவதும் உங்களிடமுள்ள பலவீனமானவர்களால்தான்(அபுதாவூத்)
குர்ஆன் கூறுகிறது
قُلْ اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ شَىْءٍ فَهُوَ يُخْلِفُهٗ وَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ
(நபியே, இவர்களிடம்) கூறும்: என்னுடைய இறைவன் தன் அடிமைகளில் தான் நாடுவோருக்கு தாராளமாய் வாழ்வாதாரம் வழங்குகின்றான். இன்னும் தான் நாடுவோருக்கு அளவோடு கொடுக்கின்றான். நீங்கள் செலவு செய்கின்றவற்றுக்குப் பகரமாக இன்னும் பலவற்றை அவனே உங்களுக்குத் தருகின்றான். வாழ்வாதாரம் வழங்குவோரில் அவன் மிகச் சிறந்தவனாவான்.
(அல்குர்ஆன் : 34:39)
மாதாந்திர பட்ஜெட்டில்
இவர்களுக்கு ஒரு பங்கு ஒதுக்குங்கள்
அல்லாஹ் நம்முடைய ரிஸ்கில் பரக்கத் செய்து தான தர்மம் செய்யும் நல்வாய்ப்பைத்
தரு வானாக!
இஸ்மாயீல்நாஜீபாஜில்மன்பயி
Post a Comment