Header Ads



சிரியாவில் கொல்லப்பட்ட ஈரானிய கொமாண்டர் யார்..? இஸ்ரேல் தேடிச்சென்றது கொன்றது ஏன்..?


தளபதி முகமது ரேசா ஜாஹேதி,, ஆரம்ப காலங்களில் ஈரானிய படைகளின் நடுத்தர தளபதிகளில் ஒருவராக இருந்தார். அதன்பின்னர் கமர் பானி ஹாஷேம் படைப்பிரிவின் பொறுப்பாளராக இருந்தார்.


2004 மற்றும் 2007 க்கு இடையில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தரைப்படையின் தளபதியாக ஜாஹேதி நியமிக்கப்படுகிறார்.


இவ்வாறு படிப்படியாக உயர்வுபெற்ற  சர்தார் ஜாஹிதி 2007 முதல் 2015 வரை குத்ஸ் படையில் பணிபுரிந்தார் மற்றும் சிரிய மற்றும் லெபனான் படைகளின் தளபதியாக இருந்தார்.


இந்த உயர் பதவியில் இருந்த ஜெனரல் இன்று -01- டமாஸ்கஸில் நடந்த சியோனிச வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.


சில சர்வதேச ஊடக தகவல்களின் படி யேமன் ஹுதிகளுக்கும், லெபனான் ஹிஸ்புல்லாக்களுக்கும் ஈரான் தொடர்ந்து உதவுவதற்கு எதிராக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


மற்றும் சில சர்வதேச ஊடகங்கள், ஈரானை போருக்குள் இழுத்துவிடும் ஒரு முயற்சியாக இத்தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.