கொத்தாகக் குதற குறிவைக்கப்பட்ட போதெல்லாம், கெத்தாக நின்று கேட்காமல் உதவியவன்.
சாதிகளுக்கு
'அப்பால்'
சகலரோடும்
'இதமாக'
இருந்தவன்.
அப்'பாலித'மாக
இருந்ததால்
அடி மனது வலிக்கிறது
அவன் பிரிவால்
தேவையற்ற
பெருமையில்
ஆவலற்றவன் இந்தத்
தேவப் பெரும.
ஏழைகளுக்காக
இறங்கி வேலை செய்தவன்
கொத்தாகக் குதற
குறிவைக்கப் பட்ட போதெல்லாம்
கெத்தாக நின்று
கேட்காமல் உதவியவன்.
சொத்துக்காக
உழைத்தவனல்ல
சோத்துக்காக வாடுவோர்க்காய்
சேத்தில் இறங்கி
சிதைந்தவன்
உனக்கு
மின்சாரம் தாக்கியதாம்
ஆனால்
ஷாக் அடித்தது
அடி மட்ட மக்களுக்கு.
சிலர்
வேகமாகச் சென்று
விபத்தாகி இறந்ததை
வேடிக்கையாகப் பார்த்து
விமர்சித்த நாட்டில்
நீ
சோகமாகப் பிரிந்து செல்வதை
சொரியும் கண்ணீருடன் பார்க்கின்றனர்.
பாலித
நீ
இறந்தாலும்
உன் வாழ்வு
இறக்காது இந்த
இலங்கை வரலாற்றில்..
-Mohamed Nizous-
வட்சப்பில் இணைவதற்கு👈👇
Post a Comment