வைத்தியர் தாரிக் கபூரின் மரணமும், சமூகம் அறிய வேண்டிய விடயங்களும்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உணவு ஒவ்வாமை காரணமாக திடீரென மரணித்துள்ளார். கண்டி கல்ஹின்னயைச் சேர்ந்த 34 வயதான தாரிக் கபூர் என்பவரே இவ்வாறு மரணித்தவராவார்.
டாக்டர் தாரிக் கபூரின் மரணம் சால்மோனெல்லா எனும் கிருமியின் தொற்று என்றும் செப்சிஸ் எனும் கொடிய தொற்று நோய்க் காரணமாக சம்பவித்ததாக டாக்டரின் சகோதரியான டாக்டர் ஷர்மிலா தெரிவித்துள்ளார்.
டாக்டரின் மரணம் தொடர்பில் அவரது குடும்ப உறவினரான டாக்டர் ஒருவரை விடிவெள்ளி தொடர்பு கொண்டு வினவியபோது நோன்பு மாதத்தில் இப்தார் உணவின் போது உட்கொண்ட சிற்றுண்டி உணவுகள் போன்றவற்றின் மூலம் இந்த கிருமி தொற்று ஏற்பட்டிருக்கலாம்.
நோன்பு பெருநாளுக்கு முன்பிலிருந்தே டாக்டர் தாரிக் தனக்கு இரைப்பை அழற்சி இருப்பதாக கூறி வந்தார். நானும் டாக்டர் என்பதால் இரைப்பை அழற்சிக்காக Syrup வழங்கினேன்.
எந்த Fast Food மூலம் இந்த கிருமி தொற்று ஏற்பட்டது என்பது அவருக்கே தெரியாது. அவரது உறவினர் வீட்டு கத்தம் வைபவத்தில் கூட அவர் வெறும் சோறே சாப்பிட்டார்.
அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இரண்டு தினங்கள் டர்டன்ஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்பு கொழும்பு அரச வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வபாத்தானார்.
நாங்கள் நோன்பு காலங்களில் Fast Food மற்றும் சோட் ஈட்ஸ் உணவுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மற்றும் BBQ உணவினையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறான உணவுகள் மூலம் கிருமி தொற்று ஏற்படலாம்.
நான் எனது வீட்டுக்கு வரும் உறவினர்களை பழங்கள், பிஸ்கட் மூலமே உபசரிப்பேன். வபாத்தான டாக்டர் எனது உறவினர். பள்ளிவாசலோடு நெருங்கிய தொடர்புள்ளவர். வசதி குறைந்தவர்களுக்கும் பள்ளிவாசலுக்கும் தாராளமாக உதவுபவர்.
கொழும்பு வைத்தியசாலையில் கண் டாக்டராக கடமையாற்றி வந்த நிலையில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமாவையும் பூர்த்தி செய்திருந்தார். தான் கண் வைத்தியத்தில் விஷேட நிபுணராக வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது’ என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பில் வபாத்தானார். அவரது ஜனாஸா அவரது சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு கல்ஹின்னை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.- Vidivelli
Post a Comment