Header Ads



அரச உளவுச்சேவை அரசாங்கத்திற்கு வழங்கியது அறிக்கை - அநுரகுமார தெரிவிப்பு


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கனடாவின் வென்கூவர் கூட்டத்தில் ஆற்றிய உரை,


இலங்கைக்கு தொலைதூரத்தில் பாதுகாப்பான வாழ்க்கையைக் கழிக்கின்ற நீங்கள் இந்த இடத்தில் பங்கேற்பதன் மூலமாக எமது நாடு மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையே வெளிப்படுகின்றது. நாம், நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்கமாட்டோமென முதன்முதலாக உங்களுக்கு ஓர் உத்தரவாதமளிக்கிறேன். எமது நாட்டின் எந்தவோரு பிரஜையும் இனிமேலும் ஏமாற்றப்படுதலுக்கோ அல்லது கவலைப்படவோ இடமளிக்க எமக்கு உரிமை கிடையாது.  எங்கள் முன்னிலையில் இருக்கின்ற விடயங்கள், உங்கள் முன்னிலையில் அளிக்கின்ற உத்தரவாதங்களை கட்டாயமாக பாதுகாத்திட எமக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது. அதனைப் பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். எமது நாட்டை மாற்றியமைப்பதைப்போலவே எமது நாட்டில் வசிக்கின்ற மக்களுக்கு சிறந்த வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கின்றது. எதிர்காலப் பிள்ளைகளுக்கு சிறந்த வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. அத்தகைய ஒன்றினை உரித்தாக்கிக் கொடுக்கின்ற பொறுப்பின் தொடக்கநிலையாக அமைவது அரசியல் மாற்றமாகும். எமது நாட்டையும் மக்களையும் இந்த தலைவிதிக்கு இழுத்துப்போட்டது எமது நாட்டின் அரசியல் அதிகாரநிலையாகும்.  எனவே இந்த அரசியல் அதிகாரநிலையை மாற்றியமைப்பதே எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முதலாவது படிமுறையாகும். அதற்குப் பதிலாக புதிய மக்கள் நேயமுள்ள அசியல் அதிகாரநிலையை தொடங்குவதுதான் ஆரம்பமாகும்.

  

இன்று எமது நாட்டு மக்கள் உருவாகியுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருப்பது வருகின்ற தேசிய தேர்தலின்போது பாடம் புகட்டுவோம், தீர்மானமொன்றை மேற்கொள்வோம் என்ற அபிப்பிராயத்துடனேயே இருக்கிறார்கள். தேர்தலை நடாத்த மாட்டேன் என நாளை ரணில் விக்கிரமசிங்க பிரகடனஞ் செய்தால் அடுத்தநாளில் ரணில் வீட்டிலேயே இருக்கவேண்டும். தேசிய தேர்தலொன்று வரும்வரையே மக்கள் இவையனைத்தையும் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் நிச்யமாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இராணுவ மற்றும் அரசியல் தலைமையின் அதிகாரத்தில் அரசாங்கத்தைப் பேணிவந்தால் அது சூழ்ச்சிகரமான அரசாங்கமாகும். எமது நாட்டில் பொலீஸ், இராணுவம், அரச நிருவாகம் இத்தகைய எந்தவொரு நிறுவனமும் சூழ்ச்சிகரமான அரசாங்கத்திற்கு இடமளிக்க மாட்டாதென்பது  உறுதியாகும்.  அதனால் தேர்தல் நடைபெறும். இப்பொழுது நாங்கள் பேசவேண்டிது  தேர்தலின்போது என்ன செய்யவேண்டுமென்பதாகும். வெளிநாட்டில் இருக்கின்ற உங்களுக்கு இலங்கையில் இருக்கின்ற உங்களின் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பாரிய அழுத்தம்கொடுக்க முடியும்.


அண்மையில் அரச உளவுச்சேவை அரசாங்கத்திற்கு அறிக்கையொன்றை வழங்கியது. அந்த அறிக்கையில் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சி பற்றி அரண்டு விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுவதாக  கூறப்பட்டுள்ளது. முதலாவது விடயம் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர் தேசிய மக்கள் சக்தியை சூழ்ந்து தோன்றிவருகின்ற இந்த புத்துணர்ச்சியை ஓர் ஆபத்தாக கருதுமாறு அரசாங்கத்திற்கு கூறப்பட்டுள்ளது. இரண்டாவது விடயம் இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவினைச் சூழ்ந்து இளைப்பாறிய கடற்படையின், வான் படையின், இராணுவத்தின் உத்தியோகத்தர்களும் சிப்பாய்களும் முண்டியடித்துக்கொண்டு சேர்கின்றமையை அவர்கள் ஓர் ஆபத்தாக காண்கின்றனர். வெளிநாடு சென்றுள்ள இலங்கையரின் எழுச்சியும் இளைப்பாறிய முப்படை அதிகாரிகளின் எழுச்சியும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிப்பாதைக்கு பிரதானமாக வழிசமைக்குமென அரசாங்கத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலின்போது அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற அதிகாரத்தில் நீங்கள் கொண்டுள்ள பலத்தை எம்மைவிட அவர்கள் நன்கறிவார்கள். சிலவேளைகளில் உங்களுக்கு வாக்குப்பலம் இல்லாதிருக்கலாம். எனினும் எங்களின் குரல், உங்களின் விழிப்பு, நீங்கள் தோற்றுகின்றவிதம்,  பேசுதல்  இலங்கையில் பலம்பொருந்திய மக்கள் பலத்தை உருவாக்குகின்றது. நீங்கள் கனடாவில் வசித்து உங்களின் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இந்த செய்தியை கொடுப்பீர்களாயின் சமூக வலைத்தளங்களில் உங்களின் குரல், உங்களின் அபிப்பிராயம் வெளியிடப்படுமாயின்  அது  தேர்தல் தொடர்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.  எனினும்  தேர்தல் காலம் நெருங்கும்போது இலங்கைக்கு வந்து நீங்கள் முனைப்பாக இடையீடுசெய்யத் தயாரெனில் இந்த பிரவாகத்தை தடுக்க எவராலும் இயலாது என்பதை நாங்கள் அறிவோம். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலப்படுத்திக்கொண்டு ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பினை தோற்கடித்து ஏற்பட்டுள்ள இந்த தலைவிதியிலிருந்து எமது நாட்டை விடுவித்துக்கொள்ள ஒன்றுசேருமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

  

நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற  பிரயத்தனத்தை ஆரம்பிப்போம். எம்மிடம் கேட்கின்ற முதலாவது கேள்விதான உங்களிடம் இந்த நாட்டைக் கட்டியெழப்புவதற்கான அணியொன்று இருக்கின்றதா? இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அந்தந்த விடயத்துறைகளை நெறிப்படுத்துவதற்காக அந்தந்த விடயத்துறைகள் பற்றிய அனுபவமும் புரிந்துணர்வும்கொண்ட அணியொன்று இருத்தல் வேண்டும். ஒவ்வொரு துறையும் பற்றிய நிபுணத்துவம்கொண்ட இயலுமைகொண்ட அணியொன்று எம்மிடம் இருக்கின்றது. புத்தகங்களில் கற்றுக்கொண்டவர்கள் மாத்திரமல்ல, பல்கலைக்கழகங்களில் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர்களும் மாத்திரமன்றி விவசாயமெனில் கமக்காரர்களுடன் முட்டிமோதி அவர்களின் வாழ்க்கை பற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் இதுவரை கட்டியெழுப்பட்ட   அந்தந்த விடயத்துறைகள் பற்றிய திறன்கொண்ட, திறமைகள் இருக்கின்றவர்களைக்கொண்ட அமைச்சரவையை நாங்கள் உருவாக்குவோம். அது இலங்கையின் மிகச்சிறந்த அமைச்சரவையாக மாறும். கெபினற் அமைச்சர் கூட்டான செயற்பாட்டில் ஈடுபடுகின்ற முறையியலொன்றை நாங்கள் அமைப்போம். எமது அமைச்சரவையில் எந்தவோர் அமைச்சரும் அறிந்த விடயுங்கள் இருக்கலாம், அறியாத விடங்களும் இருக்கலாம். நாங்கள் மனிதர்கள். 

 

மனித நாகரிகம் எவ்வாறு முன்நோக்கி நகர்கின்றது? மனித நாகரிகம் இந்த இடத்திற்கு வந்தது  தனித்தனி மனிதனின்  பாரிய விந்தைகள் காரணமாக அல்ல. மனித நாகரிகம் கட்டியெழுப்பப்படுவது  கூட்டுமுயற்சியின் அடிப்படையிலாகும். அவ்வாறான வகையைச்சேர்ந்த ஓர் ஆட்சியையே நாங்கள் அமைப்போம். கமத்தொழில் அமைச்சராயின் அவருக்கு மிகவும் பலம்பொருந்திய மதியுரை சபையொன்று அவசியமாகும். விதையினங்கள் பற்றிய, மண் பற்றிய. புதிய பயிர்கள் பற்றிய, சந்தை பற்றிய ஒவ்வொரு பிரிவும்பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அனுபவம்வாய்ந்த குழுவொன்று இருத்தல் வேண்டும். அப்போதுதான் எடுக்கின்ற தீர்மானங்களை நன்றாக அலசிஆராய்ந்து பொருத்தமானவையாக மேற்கொள்ள முடியும். அத்தகைய கட்டமைப்பொன்றினை நாங்கள் தாபிப்போம். ஒவ்வோர் அமைச்சிற்கும் ஒப்படைக்கப்படுகின்ற விடயத்துறைகள் பற்றிய விரிவான அனுபவங்களும் அறிவும்படைத்த குழுக்களைக்கொண்ட சபையொன்று நிறுவப்படும். இந்த சபைதான் அமைச்சருக்கு தீர்மானம் எடுப்பதற்காக அவசியமான கலந்துரையாடலை மேற்கொள்ளும். அந்த சபைக்குப் புறம்பாக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ள, எந்த ஒருவருக்கும்  அந்த தீர்மானம் பற்றிய கருத்துக்களை முன்வைக்க அவசியமான பேரவையொன்றை நாங்கள் நிர்மாணிக்கவேண்டும்.   இந்த நாடு நெருக்கடியில் இருந்து கரைசேர வேண்டுமாயின் கூட்டான இடையீடு, கூட்டான செயற்பாடு அவசியமாகும். அது மாத்திரமல்ல. அந்த அனைவரும் நேர்மையான, ஊழலற்ற, இந்த பணியை வெற்றிகரமாக ஈடேற்றிக்கொள்வதற்கான திராணியுள்ள மனிதர்களாக அமைதல் வேண்டும்.  இடைநடுவில் கைவிட்டுச் செல்கின்ற நழுவிச்செல்கின்ற மனிதர்கள் நியமிக்கப்படுவதில் பலனில்லை. சவாலொன்று நிலவுகின்றது அந்த சவாலை வெற்றிகொள்வதற்கான தேவையும் அர்ப்பணிப்பும் கொண்ட மக்கள் குழுமமொன்று  இந்த நாட்டை மாற்றியமைக்க இடையீடு செய்வார்களென நாங்கள் நினைக்கிறோம்.


உங்களுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் இல்லையே, வெள்ளைக்காரர்களை உங்களுக்குத் தெரியாதே என்று எங்களிடம் கேட்கிறார்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் என்பது அரசுகளுக்கிடையிலான தொடர்புகளாகும்.

No comments

Powered by Blogger.