விபத்தில் மரணமடைந்த மகளின் ஜனாஸா நல்லடக்கத்தில், ஒரு சமூக ஆர்வலரின் உருக்கமாக உரை
"23 ஆண்டுகளுக்கு முன்பு அல்லாஹ் எங்களிடம் ஒரு அமானிதத்தை ஒப்படைத்தான்.
அந்த அமானிதத்தை அல்லாஹ் திரும்பப் பெற்றுக் கொண்டான். அல்லாஹ்வே நல்ல முறையில் ஏற்றுக் கொள்வாயாக!
- எனது மகள் என்னை விட நன்றாக படித்தாள்.
- அவள் என்னை விட நன்றாக குர்ஆன் ஓதினாள்
- என்னை விட நன்றாக எழுதினாள்.
- என்னை விட நன்றாக வரைந்தாள்.
- இறுதியில் எனக்கு முன்பாக அவள் அல்லாஹ்விடம் சென்று விட்டாள்.
-எல்லாவற்றிலும் என்னை அவள் தோற்கடித்து விட்டாள்.
அல்லாஹ்வே அவளுடைய ஷஹாதத்தை ஏற்றுக் கொள்வாயாக!
ஷஹாதத் என்பது விருப்பமும், பிரார்த்தனையும் ஆகும்.
பெற்றோருக்கு பிள்ளைகளை இழப்பது மிகப்பெரிய வேதனை தரக்கூடியது.
ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பைத்துல் முகத்தஸிலிருந்து அல்லாஹ்விடம் திரும்புகிறார்கள்.
அந்த குழந்தைகளின் பெற்றோரின் வலியை விட என்னுடைய வலி பெரிதல்ல. எனது வலியை விட அவர்களுடைய வலி சிறியதல்ல!"
- ஓ. எம்.ஏ ஸலாம் சாஹிப்
Post a Comment