கண்ணியமும் மகத்துவமிக்க அல்லாஹ்வே உன்னுடைய அடியான் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன்
கண்ணியமும் மகத்துவமிக்க அல்லாஹ்வே!
உன்னுடைய அடியான், யாஸர் அல் தவ்ஸரி பைத்துல் ஹராமிலிருந்து இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன்
என் ரப்பே! இங்கே மக்கள் கூட்டம் நிறைந்திருக்கிறது, அவர்களின் சூழ்நிலைகள் மற்றும் தேவைகள் எனக்குத் தெரியாது, அவர்களின் இதயங்களில் என்ன இருக்கிறது என்றும் எனக்குத் தெரியவில்லை
யா அல்லாஹ்!
அவர்களில் நோயுற்றிருப்போரை குணப்படுத்துவா யாக!
அவர்களில் யார் துன்பத்தில் இருக்கிறாரோ அவரின் துன்பத்தை நீக்குவாயாக!
யார் தேவையுடையவராக இருக்கிறாரோ அவருடைய தேவையை நிறைவேற்றுவாயாக!
யார் கவலையுடன் இருக்கிறாரோ அவரின் கவலையைப் போக்குவாயாக!
யார் கடனாளியாக இருக்கிறாரோ அவர் கடனை நிறைவேற்றுவாயாக!
எந்தப் பெண் தன்னை கண்ணியப்படுத்தும் வாழ்க்கைத் துணைக்காகக் காத்திருக்கிறாரோ
அவருக்கு ஸாலிஹான கணவரைத் தருவாயாக!
யார் குழந்தைக்காக காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு ஸாலிஹான சந்ததியைத் தருவாயாக!
அவர்கள் யாரெல்லாம் தங்கள் உள்ளத்தில் என்னென்னத் தேட்டங்கள் வைத்திருக்கிறார்களோ-அவற்றை நீ மட்டுமே அறியமுடியும்
அவற்றை லேசாக்குவாயாக அவர்களுக்கு சிறந்ததை நீ தேர்ந்தெடுத்து நிறைவேற்றுவாயாக
அவர்களை ஏமாந்தவர்களாக ஆக்கிவிடாதே ரப்பே!
اللهم امين يارب العالمين'
Post a Comment