Header Ads



ஜனாஸாக்க­ளை எரித்த­மைக்­கா­க அரசு மன்­னிப்புக் கோர வேண்­டும் - அமைச்சர் ஜீவன்



(எம்.வை.எம்.சியாம்)

இஸ்லாமிய சமூகத்துக்கு கடந்த அரசாங்கம் இழைத்தது தவறு என்­ப­தை ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக இஸ்லாமிய சமூகத்திடம் ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன். கட்டாயத் தகனக் கொள்கையினால் இஸ்லாமிய சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் காயங்களுக்கு அரசாங்கம் முறையாக மன்னிப்புக் கோர வேண்­டும். இதற்­கா­க ஆய்வின் முடிவுகளுடன் கூடிய அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளேன் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


நேற்று முன்­தினம்(02) ஹட்­டனில் நடை­பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.


கடந்த வருடம் ஜன­வரி மாதமே நான் நீர்­வ­ழங்கல் அமைச்சைப் பொறுப்­பேற்­றி­ருந்தேன். எனினும் கடந்த காலங்­களில் யார் இந்த அமைச்சுப் பத­வியை வகித்த போதிலும் தற்­போதைய அமைச்சர் என்ற வகையில் நீர் ஊடாக கொவிட் வைரஸ் பர­வாது என்ற உண்­மையை ஏற்றுக் கொள்ள வேண்­டி­யது தனது பொறுப்பு என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­சாக்கள் புதைக்­கப்­ப­டு­வதால் நிலத்­தடி நீர் உள்­ளிட்ட நில வளங்கள் பாதிக்­கப்­படும் என தெரி­வித்து கட்­டாய தக­னக்­கொள்­கையை முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.


இந்த கூற்றை உலக சுகா­தார ஸ்தாபனம் உள்­ளிட்ட பல அறி­வியல் சார்ந்த அமைப்­புக்கள் ஏற்க மறுத்த போதிலும் இந்த கொள்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. இது இஸ்­லா­மி­யர்கள் மத்­தியில் மிகப்­பெ­ரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.


இந்­நி­லையில் நீர் வழங்கல் அமைச்­ச­ராக நான் பத­வி­யேற்ற பின்னர் இது தொடர்பில் ஆய்­வொன்றை மேற்­கொள்ள முயற்­சித்தேன். அதன்­படி கடந்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­கலைக் கழ­கத்தின் நிபு­ணர்கள் தலை­மை­யி­லான குழு மற்றும் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் நீர் தொழில்­நுட்­பத்­துக்­கான கூட்டு ஆராய்ச்சி மற்றும் விளக்க மையத்தின் ஊடாக இந்த ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டது.


ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் நிபு­ணர்கள் தலை­மையில் நீர் வழங்கல் அமைச்சின் நிதி­யு­த­வி­யுடன், இலங்­கையின் பல்­வேறு இடங்­களில் மேற்­ப­ரப்பு மற்றும் கழி­வு­நீரில் SARS-CoV-2 வைரஸ் இருக்­கி­றதா என ஆய்வு செய்­யப்­பட்­டது. ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் 2021 க்கு இடையில் நடத்­தப்­பட்ட இந்த ஆராய்ச்­சி­யா­னது, நீர் மூலம் வைரஸ் பரவும் அபா­யத்தை மதிப்­பி­டு­வதை நோக்­க­மாகக் கொண்­டது.


இதனை ஆத­ரிக்கும் வகையில், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் நீர் தொழில்­நுட்­பத்­துக்­கான கூட்டு ஆராய்ச்சி மற்றும் விளக்க மையம் ஒரு விரி­வான ஆய்வை முன்­னெ­டுத்­தது. இது COVID-19-பாதிக்­கப்­பட்ட உடல்­களை அடக்கம் செய்­வதால் நிலத்­தடி நீர் மாசு­பாடு ஏற்­ப­டு­கி­றதா என ஆய்வு செய்­தது. இந்த ஆய்வின் முடிவு இந்த ஆண்டு (2024) வெளி­யி­டப்­பட்­டது, இந்த ஆய்­வா­னது, தொற்­று­நோய்­களின் போது முறை­யான பாது­காப்­புடன் புதை­கு­ழி­களில் சட­லங்­களை அடக்­கு­வதால் நிலத்­தடி நீருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று முடிவு செய்­தது. சீல் வைக்­கப்­பட்ட உடல் பைகளில் ஆழ­மாக புதைப்­பது உட்­பட முறை­யான அடக்கம் செய்யும் நடை­மு­றைகள், ஒரு­போதும் நிலத்­தடி நீரை மாசு­ப­டுத்­தாது என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.


எனவே கூடிய விரைவில் கொவிட் 19 தொற்று காலத்தில் இஸ்­லா­மி­யர்­களின் ஜனா­சாக்கள் கட்­டாய தகனக் கொள்­கையின் அடிப்­ப­டையில் எரிக்­கப்­பட்­ட­மைக்கு அர­சாங்கம் மன்­னிப்புக் கோரு­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­படும் என தெரிவித்தார்.- Vidivelli

No comments

Powered by Blogger.