Header Ads



இஸ்ரேலியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயம் - அமெரிக்கா குறிப்பிட்டுள்ள விடயம்


ஈரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை  தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது.


இஸ்ஃபஹான் பகுதி ஈரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும்.


இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஈரானின் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது.


ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, 'நம்பகமான ஆதாரங்களை' மேற்கோள் காட்டி, இஸ்ஃபஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் 'முற்றிலும் பாதுகாப்பானவை' என்று கூறியிருக்கிறது.


அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய ராணுவம் 'இந்த நேரத்தில்' கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.


ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350கி.மீ. தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்க் கிம்மிட், இஸ்பஹானின் முக்கியத்துவம் குறித்தும், இஸ்ரேல் ஏன் அப்பகுதியை இலக்காகத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது குறித்தும் பேசினார்.


"இஸ்ஃபஹான் உண்மையில் ஈரானிய அணுசக்தி திட்டத்தின் மையமாக உள்ளது. பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் சிலர் சொல்வது போல அணுசக்தி திறனை மேம்படுத்துதுவதற்கான இடம் அது,” என்றார்.


"எனவே இத்தளத்தின்மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவுசெய்திருக்கலாம். ஏனெனில் இஸ்ரேலியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயம் இன்று தொடரும் ஏவுகணைகள் அல்ல. ஆனால் நாளைய அணுசக்தி திறன் ஆகும்," என்றார் அவர்.

No comments

Powered by Blogger.