ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டி பேரணி
- இஸ்மதுல் றஹுமான் -
2019 ஏப்ரல் 19 மிலேச்ச உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஐந்து வருட நிரைவை முன்னிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி மாபெரும் பேரணி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் நீர்கொழும்பில் இடம் பெற்றது. நீர்கொழும்பு மாரிஸ்டலாக் கல்லூரி வலவிலிருந்து கட்டுவபிட்டி சாந்த செபஸ்தியன் தேவஸ்தானத்தை நோக்கி இப் பேரணி சென்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இப்பேரணியில் இலங்கையிலுள்ள சகல பேராயர்களும் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க பிதாக்களும், கண்ணியாஸ்திரிகளும் கலந்து கொண்டனர். பேரணியில் சென்றவர்கள் மரமடைந்த மற்றும் நோயுற்றவர்களின் புகைப்படங்களை முன் ஏந்திச்சென்றனர். நீர்கொழும்பு பிரதேச சகல தேவஸ்தானங்களில் இருந்தும் பங்குத் தந்தை களின் தலைமையில் கத்தோலிக்க மக்கள் வெள்ளை மற்றும் கருப்பு நிற உடையனிந்து பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பு பிரஜைகள் முன்னணி "நீதி கொல்லபட்டு 5 வருடங்கள்" எனும் தொனிப்பொருளில் பால்திசந்தியில் தாக்குதலை கண்டித்து பதாகைகளை ஏந்திய வன்னம் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது எப்போது?, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரச அதிகாரத்திற்காக திட்டமிட்ட மனிதப்படுகொலை, சூத்திரதாரிகள் திட்டமிட்டவர்கள் கொலையாளிகளை உடனடியாக வெளிபடுத்து,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றம் சாட்டபட்டவர்களை பாதுகாப்பது உடன் நிறுத்து போன்ற சுலோக அட்டைகள் ஏந்தி நின்றனர்.
பேரணி சுமார் இரண்டு மணி நேரம் பயணித்தது.
Post a Comment