ரணில் - பசில் மீண்டும் சந்திப்பு, பேசப்பட்ட விடயங்கள் என்ன..?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் நேற்று (05) பிற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேர்தல்கள் தொடர்பிலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இதற்கு முன்னர் இரண்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இதில் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ரணிலுக்கும் பஸிலுக்கும் மக்கள் ஆணை கிடையாது. இந்த நாட்டுமக்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் இருவருடைய செயல்பாடுகளை அங்கீகரிக்கவில்லை.இந்த இரகசியம் இந்த இரு நபர்களுக்கும் நன்றாகவே புரிகின்றது. அதனால்தான் பதவிப்பித்தும், அதிகார மோகமும் தலையில் பதிந்திருக்கும் இருவரும் அவரவர்களுடைய இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இ்ந்த நாட்டின் சட்டங்களையும் நீதியையும் காலால் மிதித்து இருவரின் செருப்புகளால் அழுத்திக் கொண்டு பல்வேறு சூழ்ச்சிகளையும் புரட்டல்களையும் செய்து தங்கள் இருப்பைத் தொடரலாம் என்ற கற்பனையில் இருவரும் அடிக்கடி சந்தித்து சூழ்ச்சிகளையும் சதித்திட்டங்களையும் செய்து இந்த நாட்டுமக்கள், நாட்டுச் சட்டங்களைக்குழிதோண்டிப் புதைக்கத் திட்டம் போடுகின்றனர். அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர், இறைவனும் சூழ்ச்சி செய்கின்றான். இறைவனின் சூழ்ச்சி நிச்சியம் மேலோங்கும் என இறைவன் பொதுமக்களுக்கு ஆறுதல் கூறுகின்றான். பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete