Header Ads



மைத்திரிக்கு எதிராக சந்திரிக்கா - நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்றார்


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் இன்று (04) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.


இந்த விசேட செய்தியாளர் மாநாடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

 

அவர்கள் மேலும் கூறியதாவது, “கட்சியின் அழிவினை பார்த்துக்கொண்டிருக்க முடியாத நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீதிமன்றத்தை நாடினார். அதற்கிணங்க, கட்சியின் தலைவராக இருந்த  மைத்திரிபால சிறிசேனவுக்கு தடை விதிக்கப்பட்டது." என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.