இலங்கையர்களுக்கு அபூர்வ நிகழ்வை காண வாய்ப்பு
வான் பரப்பில் ஏற்படும் அதிசய நிகழ்வினை பார்வையிடும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.
12P/Pons-Brooks என்ற விஞ்ஞான பெயர் கொண்ட வால் நட்சத்திரத்தை காண முடியும், என கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் ஜானக அடசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி முதல் இதனை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என அடசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி அதிக பட்ச வால் நட்சத்திரம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்று இந்த வால் நட்சத்திரம் பூமியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் 240 மில்லியன் தூரம் பயணிக்கும்.
12P/Pons-Brooks என்ற வால் நட்சத்திரம் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் மேற்கு வானில் அடிவானத்திற்கு அருகில் அவதானிக்க முடியும் என பேராசிரியர் ஜானக அதாசூரிய மேலும் தெரிவித்தார்.
Post a Comment