இஸ்லாத்தை ஏற்ற அடுத்த நாள், நோன்பு பிடித்தபடியே வபாத்தான யுவதி
இந்த மாதம் துவக்கத்தில் சகோதரனுடன் சுற்றுலா விசாவில் துபாய் வந்து, வேலை தேடி அலைந்தவர். ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி வேலை தேடியதோடு அமீரகத்தின் அழகை பார்த்து ரசித்தார்.
கூடவே துபாயின் ரமலான் மாத காட்சிகளும் அவரை கவர்ந்தது. அதிகம் எதுவும் யோசனை செய்யாத டாரியா மார்ச் 25ம் தேதி இஸ்லாமிய மார்க்கம் தழுவியதோடு அன்றிரவே தனது முதல் நோன்பு துவங்கினார்.
இறைவனின் நாட்டம் முதல் நோன்பு பூர்த்தியாகும் முன்பே மறுநாள் நண்பகல் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வஃபாத் ஆனார் டாரியா.
சகோதரர் வேண்டுகோள் படி துபாயிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாத்தை தழுவி 24மணி நேரத்தில் வஃபாத் ஆன ஒரு சகோதரியின் ஜனாசா அடக்கம் செய்யப்படுகிறது என்று யுஏஇ ஜனாசா தளத்தில் பதிவு செய்யப்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து அல்-குசைஸ் கபரஸ்தான் பள்ளியில் நடந்த ஜனாசா தொழுகையிலும் அடக்கத்திலும் கலந்து கொண்டனர்.
அல்லாஹ் அந்த சகோதரியை பொருந்திக் கொள்வானாக.
Post a Comment