Header Ads



Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா - 2024.


Apax Campus  இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில் நிறுவனத்தின் ஸ்தாபகர் மீரா சாஹிப்  ஜெஸ்லின் ரிசாட்  தலைமையில் நடைபெற உள்ளது.


இந்நிகழ்வில் மாலைதீவு, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள்,  உள்நாட்டு அமைச்சர்கள், பேராசிரியர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் கல்வித் துறை உயர் அதிகாரிகள், என பல்வேறு உயிர்மட்ட சிறப்பு விருந்தினர்களும்  கலந்து சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்வின் போது கல்வி, முகாமைத்துவம், கலை, விஞ்ஞானம் போன்ற துறைகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பட்டமளித்து கௌரவிக்கப்பட உள்ளனர். 


Apax Campus  நிறுவனமானது 2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனமானது இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்த பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணவு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு பல்வேறு கற்கைநெறிகளை தொலைதூர கற்கை மூலம் வெற்றிகரமான முறையில் நடாத்தி வருகின்றது. அந்த வகையில் IIC University of Technology , Azteca University மற்றும்  Gideon Robert University போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சான்றிதழ் கற்கைநெறி  முதல் கலாநிதி கற்கைநெறி  வரையிலான பல்வேறு துறை சார் கற்கைநெறிகளை  நடத்தி வருகின்றது.


மேலும் இந்நிறுவனமானது அர்ப்பணிப்பு உள்ளதும், தகைமையும் அனுபவமும் உள்ள சிறந்ததொரு விரிவுரையாளர் குழுவொன்றினை கொண்டுள்ளதுடன், சிறப்பான முகாமைத்துவக் கட்டமைப்பினையும் கொண்டிருப்பதனால் நாடு முழுவதும் உள்ள மாணவர்களை ஈர்த்துள்ளது.  Apax Campus நிறுவனத்தின் கற்கைநெறிகளுக்கான கட்டணமானது நியாயமானதும், இலகு தவணை அடிப்படையிலான கட்டண முறையையும் கொண்டுள்ளமையினால் அதிகமான மாணவர்கள் இணைந்து பல்வேறு பாடநெறிகளைப் பயில்வதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. 


2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையும் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து கூட கற்கை நெறிகளை வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளமையானது இங்கு தொட்டுக்காட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். மேலும் இலங்கையில் அரச தொழில்துறைகளில் சேவையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் Apax Campus ஊடாக பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்து, அத்தகைமை மூலம் பதவி உயர்வை பெற்றுள்ளமையும் முக்கிய அம்சமாகும். Apax Campus கல்வி நிறுவனம் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல்வேறு துறை சார்ந்த கற்கைநெறிகளை நடத்துவதினால் இன்றைய தொழிற்சந்தைக்குத் தேவையான திறன்களையுடைய தொழிலாளர்களை உருவாக்கியுள்ளமை மற்றும் ஒரு சிறப்பம்சமாகும். Apax Campus இன் நவீன கற்பித்தல் ஒழுங்கு முறைகள், துறைசார் கட்க்கைநெறிகளின் அறிமுகம், நெகிழ்வான தவனைக் கட்டண முறை, அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் என்பவற்றால் சர்வதேச ரீதியாகவும் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கச்செய்துள்ளது. 


Apax Campus இன் பிராந்திய நிறுவனங்கள் விரைவில் வெளிநாடுகளிலும் ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்,  காலத்துக்குத் தேவையான  தொழிற்திறன்களை  கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதற்கான  பல்வேறு பாடநெறிகளையும் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்த நிறுவனமானது கல்வித் துறையுடன் மட்டும் நின்று விடாது பல்வேறு சமூக அபிவிருத்தி பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.