Header Ads



802 கிலோ எடையுடைய 15,000 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் கண்டுபிடிப்பு




802 கிலோ எடை இரத்தினக்கல்    இலங்கையின் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.


அதன்படி இதன் பெறுமதி சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது.


கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தினகல் வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும்.


அதேவேளை பல இரத்தினங்கள் மற்றும் கொருண்டம் இனங்களின் படிகங்கள் பல்வேறு இரத்தினங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்படுகின்றன.  


அதேவேளை கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆசியாவின் ராணி" என அழைக்கப்பட்ட சுமார் 310 கிலோ எடை இரத்தினம் கல் ஒன்று இரத்தின புரியில் கண்டுபிடிக்கப்பட்டது.


உலகின் மிகப்பெரிய இயற்கையான கொருண்டம் நீல சபையர் அது என கூறப்பட்ட நிலையில் தற்போது 802 கிலோ எடை இரத்தினக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.