Header Ads



30 அல்லது 29 நோன்புகளையும் நோற்கும், வாய்ப்பை வழங்கிய ரஹ்மானே


அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் 


கருணையுள்ள ரஹ்மானே!


முபாரக்கான ரமளான் மாதத்தின் முப்பது நோன்புகளையும் நோற்கும் வாய்ப்பை வழங்கிய ரஹ்மானே உனக்கு நன்றி செலுத்துகிறோம் 


இந்த மாதத்தில் நாங்கள் செய்த அனைத்து நல்லமல்களையும் ஏற்றுக்கொள்வாயாக 


இந்த ரமளானை மறுமையில் எங்களுக்கு  சாட்சியாக ஆக்குவாயாக 


எங்களுக்கு எதிராக சாட்சிசொல்லாமல் ஆக்குவாயாக 


இந்த ரமளானை எங்களின் வாழ்நாளில் இறுதியாக ஆக்காமல் மேலும் பல ரமளான் மாதங்களையும் லைத்துல் கத்ர் இரவுகளையும் அடையும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக 


அகிலங்களை படைத்த அல்லாஹ்வே! நாங்கள் வாழ்கின்ற பூமியில் உன் அருளை பொழிவாயாக!


எங்கள் மக்களிடையே நல்ல எண்ணத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவாயாக!


வறட்சி, வெள்ளம், கொடிய நோய், போன்ற துன்பங்களை விட்டும் என் நாட்டு மக்களை காப்பாயாக!


 என் நாட்டு மக்களில் யார்யாரெல்லாம் எங்களை எதிரியாக பார்க்கிறார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!


என் சமுதாய மக்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் உன் அருமை ரஸுல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றி பிற சமுதாய மக்களுக்கு முன்மாதிரியாக வாழ அருள் புரிவாயாக!


ஆமீன்

No comments

Powered by Blogger.