Header Ads



ஒரே பார்வையில் ரமழானின் 29 நாட்களுக்கான கேள்விகள் (விடைகள் கிடைக்கவேண்டிய இறுதித் திகதி 30-04-2024)


ஒரே பார்வையில் ரமழானின் 29 நாட்களுக்கான கேள்விகள் (விடைகள் கிடைக்கவேண்டிய இறுதித் திகதி 30-04-2024)

ஜம்இய்யதுஷ்  ஷபாப், ஜப்னா முஸ்லிம் இணையத்தினால் புனித ரமழான்  மாதத்தை  முன்னிட்டு நடாத்தப்படும் ‘ரமழான்  பரிசு மழை’  கேள்வி, பதில் போட்டி நிகழ்ச்சியின் கேள்விகள்.


நாள்  01

A. இஸ்லாமிய கலீபாக்களில் முதல் முதலில் ஒரு சிறப்பு பெயரால் உமர் ரழி அவர்கள் அழைக்கப்பட்டார்கள் அந்த சிறப்பு பெயர் என்ன?

B. ஹிஜ்ரத் என்றால் என்ன ?

C. இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?


நாள்  02

A. இஹ்ஸான் என்றால் என்ன?

B. ஜிப்ரீல் அலை அவர்கள் மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இரு அடையாளங்களையும் சுருக்கமாக கூறுக

C. தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன ?


நாள்  03

A. அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயர் என்ன ?

அவர் எப்போது இஸ்லாத்தில் இணைந்தார்? அவர் அறிவித்த ஹதீஸ்கள் எத்தனை?

B. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என சாட்சி கூறிய நாம் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு அம்சங்களையும் சுருக்கமாக குறிப்பிடுக

C. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் என்றால் என்ன?


நாள்  04

A. தவ்ர்  குகை நிகழ்ச்சி அல்குர்ஆனில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது

B. நபியின் தோழர் என குர்ஆனில் கூறப்பட்ட நபித்தோழர் யார்?

C. இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் செயற்பட்ட தேசிய காங்கிரசில் அங்கத்துவம் வகித்த முஸ்லிம்  தலைவர்கள் மூவரின் பெயர்களைக் குறிப்பிடுக.


நாள் 05

A. காலையில் மூன்று முறையும் மாலையில் மூன்று முறையும் பாதுகாப்புக்காக ஓத வேண்டிய துஆவை குறிப்பிடுக

B. உஸ்மான் ரலி அவர்களின் சிறப்பு பெயர் என்ன?

C. 1946ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ் சோல்பரி அரசியல் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பெயர் மாற்றம் பெற்றது. குறித்த பெயரைக் குறிப்பிடுக.


நாள்  06

A. ஹதீஸ் அறிவிப்பில் நபித்தோழர்கள் அனைவரும் எப்படி நோக்கப்படுவார்கள் ?

B. அலி  ரலி அவர்களை வரலாற்றில்  கடுமையாக விமர்சித்து வந்தவர்களின் பெயர்?

C. 2023ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு யாருக்கு, எதற்காக  வழங்கப்பட்டது?


நாள்  07

A. முஆவியா (ரலி) அவர்கள் மூலம் எத்தனை ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன ?

B. அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடி விட்டால் அவருக்கு என்ன செய்வான் ?

C. ஒரு வருடத்தில் உலகில் உற்பத்தி செய்யப்படும்  17% உணவு வீணாவதுடன், 3 மில்லியன் மக்கள் பட்டினியால் வருந்துவதாகவும் கூறிய நிறுவனம் எது?


நாள்  08

A. அல்குர்ஆனை திருத்தமாக ஓதக் கூடியவர்கள் யாருடன் இருப்பார்கள்?

B. நபியவர்களின் மனைவியர்கள் எப்படி அழைக்கப்படுவார்கள்?

C. இலங்கை, புத்தளத்தில்  குதிரை மலை  (ஜபளுல் பர்ஸ்) என்ற வரலாற்று சிறப்புமிக்க இடம் காணப்படுகின்றது. குறித்த இடம் அப்பெயர் கொண்டு அழைக்கப்டுவதற்கான காரணத்தை  குறிப்பிடுக.


நாள்  09

A. ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

B. அஸ்ஸாமு அலைக்கும் என்றால் என்ன அர்த்தம்?

C. உலக மரபுரிமை நகரமான கண்டியில்  காணப்படும் மணிக்கூட்டு கோபுர கட்டுமானத்திற்கு நிதியுதவி செய்தவரின் பெயர் என்ன?  


நாள்  10


A. அஸ்ஸகீனா என்றால் என்ன அர்த்தம்?

B. இமாமை எந்த நிலையில் அடைந்தால் அந்த ரக்கஅத்தை நாம் அடைந்து கொண்டதாக கருதப்படும்?

C. தெற்காசியாவில் உள்ள அதிக உயரமான தொலைக் காட்சி மற்றும் தொலை தொடர்பு கோபுரம் எது  ?  


நாள்  11 

A. ஸஹாபாக்கள் அல்லது ஸஹாபி என யாரைக் குறிப்பிடப்படும்? 

B. தந்தையுடன் உஹத் யுத்தத்திற்கு  சென்று  குறைந்த வயது காரணமாக திருப்பியனுப்பப்பட்ட நபித்தோழர் யார்?

C. தொலமியின் தேசப்படத்தில் அரேபியர் நதியென்று குறிப்பிடப்படும் நதியின் தற்போதைய பெயர் என்ன ?   


நாள் 12

A. அபுல் முன்தீர் என அழைக்கப்பட்ட நபித்தோழர் யார் ?

B. அல்குர்ஆனில் உள்ள மகத்தான வசனம் எது?

C. "கொல-அம்ப-தோட்ட" அதாவது "இலைகள் நிறைந்த மா மரங்களைக் கொண்ட துறைமுகம்"    என்ற அறிமுகத்துடன் இலங்கையில்  பெயரிடப்பட்ட முக்கிய நகரம் எது?  


நாள் 13

A. கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரும் எதற்காக வேதனை செய்யப்பட்டனர்?

B. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறப்புப்பெயர் என்ன?

C. இலங்கையின் மூன்றாவது பிரதம நீதியரசராக இருந்து முஸ்லிம்களின் வரலாற்றை பாதுகாத்த பிரித்தானியாவை சேர்ந்த  நபர் யார் அவர் செய்த முக்கிய பணி  என்ன? 


நாள் 14

A. அபூ  பார்ஷா (ரலி) அவர்களின் சிறப்புப் பண்பு என்ன?

B. எப்போது தூங்குவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள் ?

C. 5 ஆம் நூற்றாண்டில்  ‘யோத வெவ’  (இராட்சத குளம்)  தாதுசேன மன்னரினால்  கட்டப்பட்டது.  இந்த திட்டத்திற்கு   தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்கியவர்கள் என்று யாரை  குறிப்பிடுகின்றார்கள் ? 


நாள் 15 

A. இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழரும் நபி (ஸல்) அவர்களும் பால்குடி சகோதரர்கள் ஆவர். இருவரும் ஒரு தாயிடம் பால் குடித்துள்ளனர். அந்தத் தாயின் பெயர் என்ன?

B. தொழுபவர் தனக்கு முன்னால் வைக்க வேண்டிய தடுப்புக்கு அரபியில் என்ன கூறப்படும்.

C. உலகில் முதலாவதாக மெய்நிகர் சுற்றுலா முறையை அறிமுகம் செய்த நாடு எது ? 

நாள் 16 

A. ‘அல்லாஹ் ஸலவாத்  சொல்கிறான்’ என்பதன் அர்த்தம் என்ன?

B. நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஸலவாத்திற்கு கூறப்படும் பெயர் என்ன?

C. நேட்டோ அமைப்பின் 32 ஆவது உறுப்பு நாடாக  இணைந்து கொண்ட நாடு எது ? 


நாள் 17 


A. நபி (ஸல்) அவர்கள் மிகப் பெரும் பாவங்களாக குறிப்பிட்டவைகளில்  இரண்டாவது பாவம் எது?

B. பஸராவில் இருந்த இரண்டு சிறந்த ஸஹாபாக்களும் யார்?

C. “இந்த நூல் இருக்கும்வரை ஐரோப்பா கிழக்குலகில் ஆதிக்கம் செலுத்தவோ, அல்லது நிம்மதியடையவோ முடியாது. எனவே, நாங்கள் இந்நூலை முற்றிலும் அழித்துவிட அல்லது முஸ்லிம்களுக்கு அதனுடனான தொடர்பைத் துண்டித்துவிட எங்களது சக்தி, ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி முயற்சித்தல் அவசியமாகும்.” 1894ம் ஆண்டு  பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அல்-குர்ஆனைத் தனது கையில் வைத்துக்கொண்டு  இவ்வாறு கூறிய நபர் யார்? 


நாள் 18 

A. முனாஃபிக்குகளின் நான்கு பண்புகளும் எவை?

B. அப்துல்லா இபுனு அம்ர்  (ரலி) அவர்கள் எத்தனை ஹதீஸ்களை அறிவித்துள்ளார் ?

C. மத்தியகாலப்பிரிவைச்  சேர்ந்த  மதங்கள்  பற்றிய ஒப்பீட்டு ஆய்வின் முன்னோடியாக கருதப்படுபவர்  யார் ?


நாள் 19 

A. ஜாபீர்  இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் எத்தனை?அவர்களுக்கு எத்தனை சகோதரிகள் இருந்தனர்.

B. எவற்றை சாப்பிட்டால் பல் துலக்காமல் பள்ளிக்குச் செல்லக்கூடாது?

C. ‘இமாமுல் அரூஸ்’ என அழைக்கப்படும் ‘மாப்பிள்ளை ஆலிம்’ அவர்கள் அரபுத் தமிழில் வெளியிட்ட நாவலின் பெயர் என்ன ?


 நாள் 20 

A. ரஹ்மானுக்கு விருப்பமான இரண்டு வார்த்தைகளும் எவை ?

B. கடல் நுரையளவு பாவம் இருந்தாலும் அவை மன்னிக்கப்பட இந்த துஆக்களை எத்தனை முறை கூற வேண்டும் ?

C. இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக  வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் 2023ஆம் ஆண்டு தெரிவாகினார். அவரது பெயரையும், எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதையும்  குறிப்பிடுக?


நாள்  21 

A. பாவங்களை அழித்து அந்தஸ்துக்களை உயர்த்தக்கூடிய மூன்று அமல்களும் எவை?

B. “ரிBபாத்” என்றால் என்ன?

C. உலகின் முதல் திண்மக்கழிவு மின்சக்தி உற்பத்தி நிலையம் எங்கு காணப்படுகின்றது ?


நாள் 22

A. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புபவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய மூன்று பண்புகளும் எவை?

B. அயலவர்கள் என்பதில் யாரெல்லாம் அடங்குவார்கள் என்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்?

C. 1889 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தால் சட்டவாக்க சபைக்கு நியமிக்கப்பட்ட முதல்  முஸ்லிம் பிரதிநிதியின் பெயர் என்ன?


நாள் 23

A. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தர்மங்களில் இரண்டைக் குறிப்பிடுக.

B. “பFஃல்” என்றால் என்ன?

C. “MMXX” என்ற உரோம இலக்கத்தினால் எந்த ஆண்டு குறிப்பிடப்படுகின்றது?


நாள் 24

A. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் கற்றுக் கொடுத்த வார்த்தைகள் எவை?

B. “ருFபிஅதில் அக்லாம்” என்பதன் பொருள் என்ன?

C. வீதிப் போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கடைப்பிடிக்கப்படும்   சர்வதேச தினம் யாது?


நாள் 25 

A. “ஹதீஸுல் குதுஸி” என்றால் என்ன?

B. அல்லாஹ் தனக்குத்தானே தடுத்துக்கொண்ட விடயம் எது? 

C. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுவதன் இரண்டு  நோக்கங்களையும் குறிப்பிடுக.


நாள் 26 

A. ஈமானில் பாதியாக அமையக்கூடிய அம்சம் எது?

B. பொறுமையின் மூன்று வகைகளும் எவை ?

C. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அடித்தளமிட்ட காரணிகளாக கூறப்படும் ஐந்து விடயங்களைக் குறிப்பிடுக   


நாள் 27 

A. நபி (ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத் இரண்டைக் குறிப்பிடுக 

B. போருக்குப் போக முடியாமல் அழுது கொண்டே வீட்டுக்குச் சென்ற நபித்தோழர்கள் பற்றி அல் குர்ஆனில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது?

C. உலகில் கோவிட் 19 தொடர்பாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மூன்றையும் அவற்றை தயாரித்த நாடுகளையும் குறிப்பிடுக


நாள் 28 

A.‘நோன்பு ஒரு கேடயம்’ என்பதன் அர்த்தம் என்ன ?

B. இந்த மார்க்கத்தின் ‘தூண்’ எது?

C. இலங்கையின் நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்று உலகின் பிரதான 04 நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகத் தெரிவானது. குறித்த திட்டத்தின் பெயரையும் அதற்கு  பொறியியல் உதவி வழங்கிய நாட்டையும் குறிப்பிடுக 


நாள் 29 

A. “நல்லறம்” என்றால் என்ன? 

B. “பாவம்” என்றால் என்ன? 

C. இலங்கை பாராளுமன்றத்தில் காணப்படும் செங்கோலை  தயாரித்த  நிறுவனம் எது? யாரால், எப்போது அன்பளிப்புச் செய்யப்பட்டது?



No comments

Powered by Blogger.