Header Ads



கைதான பெண்ணுடன் பொலிஸ் மா அதிபரின் உரையாடல்


யுக்திய நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் கீழ், நுகேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (11) அதிகாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.


குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய, வெலேவத்தை மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் அங்கு சென்றிருந்தார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரு பெண்ணிடம் பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்தினார்.


பொலிஸ் மா அதிபர் - "இதற்கு முன் எத்தனை முறை பொலிஸில் பிடிபட்டிருப்பாய்?"


கைது செய்யப்பட்ட பெண் - "இல்ல சேர். இது தான் முதல் முறை."


பொலிஸ் மா அதிபர் - "நேற்று தானா வியாபாரத்தை ஆரம்பித்தாய்?"


கைது செய்யப்பட்ட பெண் - "ஆமாம் சேர். என் இரண்டு குழந்தைகளுக்கும் சாப்பாடு கொடுக்க வேண்டும். வேலைக்கு போக முடியாது முழங்கால் வீக்கம்."


பொலிஸ் மா அதிபர் - உன்னால் வேறு ஏதாவது செய்ய முடியாதா? போதைபொருள் விற்காமல்?


சந்தேகம் - "நான் அதிர்ஷ்டலாப சீட்டு விக்கிறேன். என்னால நடக்க முடியல. கால்கள் வீங்கி இருக்கு. என்னால ஒன்றும் செய்ய முடியாது."


பொலிஸ் மா அதிபர் - "உன் பிரச்சனை அதிர்ஷ்டலாப சீட்டு விற்க நடக்க முடியாததா? அதிர்ஷ்டலாப சீட்டு தந்தால் விற்க முடியுமா? இவவுக்கு அதிர்ஷ்டலாப சீட்டுகளை வீட்டுக்கு கொண்டு போய் வழங்க ஏற்பாடு செய்யவும்.


பொலிஸ் அதிகாரி - "முடியும் சேர்..."


பொலிஸ் மா அதிபர் - "அதிர்ஷ்டலாப சீட்டு பிரதிநிதியை அழைத்து அதிர்ஷ்டலாப சீட்டுகளை வீட்டிற்கு கொண்டு வந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முறை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி வரும்.

No comments

Powered by Blogger.