ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிஷ்டம் தென்படுகின்றது, எனக்கு இல்லாத தகைமை என்ன..?
ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிர்ஷ்டம் வருகின்றது எனவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறினேன். ஆனால், மக்கள் வாக்களித்தனர்.
இறுதியில் என்ன நடந்தது? நான் கூறியதுபோல் நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, எமது கருத்துக்களையும் மக்கள் செவிமடுக்க வேண்டும்.
எனக்குக் கட்சி இருக்கின்றது, சிறந்த தலைவராக நான் உள்ளேன். அதுமட்டுமல்ல ஜாதக நிலையும் நல்லதாகவே உள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிஷ்டம் தென்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான அனைத்து தகுதியும் எனக்கு இருக்கின்றது.
எனக்கு இல்லாத தகைமை என்ன?" என அவர் கேள்வி எழுப்பினார்.
சனாதிபதியாக தெரிவு செய்யப்பட தனக்கு தகுதியும், தகையையும் இருக்கின்றது என யார் கூறுகின்றாரோ, அவர் பற்றி எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறு முன்னோர்கள் கூறியுள்ளனர். முன்னோர் வாக்ைகச் சரியாக பின்பற்றினால் நாம் கஷ்டத்திலும் துன்பத்திலும் ஆளாக மாட்டோம் என்பது தான் யதார்த்தம்.
ReplyDelete