Header Ads



கோட்டாபயதான் குற்றவாளி, அவரை யாரும் வெளியேற்றவில்லை.


ஜனாதிபதி பதவியிலிருந்து தான் துரத்தப்பட்டமைக்குத் தமிழர்களும், முஸ்லிம்களும் அரகலய போராட்டத்தில் பங்கேற்றமையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  குற்றஞ்சாட்டியுள்ளமை தொடர்பில் கலாநிதி தயான் ஜயதிலக பதில் வழங்கியுள்ளார்.


ஆங்கில ஊடகம் ஒன்றில் கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள நூல் தொடர்பான விமர்சன உரையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும் தெரிவித்துள்ளதாவது,


“அரகலய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சிங்கள - பௌத்த கிராமப்புற விவசாயிகளின் பிள்ளைகள். கோட்டாபயவின் திட்டங்கள் காரணமாக கிராமப்புறங்களிலிருந்த படையினரின் குடும்பங்களும் உறவினர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.


அவரே குற்றவாளி. எனவே, அவரை யாரும் வெளியேற்றவில்லை.


ஆயுதமற்ற மக்கள் சக்தியின் மூலமே அவர் வெளியேற்றப்பட்டார் ”என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.