Header Ads



பலஸ்தீனியர்களே நீங்கள் தனியாக இல்லை


- நன்றி தூது -


யெமன் அன்சார் அல்லாஹ் தலைவர் சையத் அப்துல்-மாலிக் அல்-ஹூதி காஸாவுடனான தமது ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துகிறார், வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது என்று சூளுரைத்தார்.


யெமன் தலைவர் சையத் அப்துல்-மாலிக் அல்-ஹூதி பிப்ரவரி 29, 2024


யெமன் அன்சார் அல்லாஹ் தலைவர் சையத் அப்துல்-மாலிக் பத்ருதீன் அல்-ஹூதி கடந்த வியாழக்கிழமை காஸா பகுதியில் உள்ள எதிர்ப்பு போராளிகள் இஸ்ரேலிய எதிரிகளுடன் "தைரியமாகவும், திறமையாகவும், தாக்கத்துடனும்" சண்டையிட்டு வருவதாகவும், ஐந்து மாதங்களாக போர் மற்றும் முற்றுகை நீடித்த போதிலும் சியோனிச ஆக்கிரமிப்பாளர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.


தனது வாராந்திர தொலைக்காட்சி உரையின் போது, அல்-ஹூதி, "பலஸ்தீனின் கட்டுப்பாடு இனி ஒருபோதும் சினிஸ்ட்டுகளிடம் இருக்கப்போவதில்லை, அவர்கள் எவ்வளவு தான் அழிவு, குற்றம் மற்றும் கொலைகளைச் செய்தாலும் அவர்களின் தவிர்க்க முடியாத விதி, அழிவு. தோல்வி, மற்றும் அவமானம் மட்டுமே." என்று கூறினார்.


"அல்-அக்ஸா என்ற புனிதமான பெயரின் கீழ் போராட்டம் தொடரும், அதன் உண்மையான விளைவு எதிரியின் நிச்சயமான தோல்வியாகவே இருக்கும்."


உம்மத்தின் இருப்பானது பாலஸ்தீனிய விடயத்தின் பொறுப்பான வழிநடத்தலில் தங்கியுள்ளது என்று வலியுறுத்திய அவர், அரேபியர்கள் அதை எவ்வளவு நிராகரிக்க முயற்சித்தாலும், தங்கள் கடமைகளிலிருந்து தப்பிக்க முடியாது; அதன் விளைவுகள் அவர்களுக்கு மிகவும் கடுமையானவையாக இருக்கும்" என்று எச்சரித்தார்..


அல்-அக்ஸாவை அழித்து அதற்குப் பதிலாக கோயிலைக் கட்டுவது "இஸ்ரேலின்" முதன்மை இலக்காக இன்னும் உள்ளது என்று அல்-ஹூதி கூறினார், "பல அரேபிய நிலங்களின் சியோனிச ஆக்கிரமிப்பும் அவ்வாறே" என்றார்.


நைல் நதியிலிருந்து அல்-புராத் நதி வரை தங்களது நேரடிக் கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதை இஸ்ரேலியர்கள் அவர்களது லட்சியமாக கொண்டுள்ளார்கள். அவர்கள் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள நிலத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு மேலும் முன்னேற திட்டமிட்டுள்ளார்கள், அங்கு வாழும் மக்களையும் அதன் வளங்களை அபகரிக்க விரும்புகிறார்கள்," என்று ஹூதி தலைவர் கூறினார்.


இந்த பேராசை கொண்ட லட்சியத்தை அவர்கள் ஒரு சித்தாந்தமாகவும், அரசியல் நோக்காகவும் மாற்றியுள்ளனர், தங்கள் இலக்குகளை அடைய நீண்டகால வேலைத்திட்டத்தை பின்பற்றி அணிதிரண்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்துகிறார்.


"அரேபியர்கள் ஒவ்வொரு ஆக்கிரமிப்பையும் சுயாதீனமாக எதிர்கொண்டனர் என்றாலும் அதை அதன் நச்சு வேர்களிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு எழுச்சி நிகழ்வாகக் கருதினர், மேலும் விஷயம் தற்காலிகமாக தீர்க்கப்பட்டவுடன் நச்சு வேறை பிடுங்கி எறியவேண்டிய அவசியத்தை மறந்தனர்”. சியோனிஸ்டுகளின் முதன்மை இலக்கு அரேபியர்கள் என்பதையும் குறிப்பாக அரபு முஸ்லிம்கள் என்பதையும் தெளிவுபடுத்தி சியோனிஸ்டுகள் கொண்டுள்ள விரோதத்திற்கு எதிராக உடனடியாக அணிதிரளுமாறு அரேபியர்களை வலியுறுத்தினார்.


நமது நாடுகள் மற்றும் மக்கள் மீது மிகவும் விரோதமான பார்வையைக் கொண்ட சியோனிஸ்டுகளுக்காக உலக அரங்கை வளர்த்து வருபவர்களை அல்-ஹூதி சாடினார், "தங்களுக்கு எதிராக பின்னப்பட்ட சதித்திட்டங்கள் குறித்து அரேபியர்கள் மத்தியில் துரதிர்ஷ்டவசமான பரந்த கவனக்குறைவு மற்றும் மயக்க நிலை" இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.


"இஸ்லாமிய தேசம் குறிப்பாக எங்கள் அரபு நிலங்கள், அனைத்து மட்டங்களிலும் திட்டமிட்டு குறிவைக்கப்படுகிறன்றன, மேலும் உள்நாட்டு மோதல்கள் மற்றும் சச்சரவுகளின் கட்டுக்கதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன" என்று கூறிய அவர், மேலும் எமது தேசத்தில் ஊழலைப் பரப்புவதற்கும், அதன் கண்ணியத்தையும் வீரத்தையும் அழிப்பதற்கும், உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாற்றுவதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும்  குறிப்பிட்டார்.


காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் இனப்படுகொலைக்கு எதிரான லெபனானின் ஆதரவு முன்னணி குறித்து பேசிய அல்-ஹூதி, "ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகள் மூலம், இஸ்ரேலிய எதிரியை எதிர்கொள்வதில் அதன் பெரும் தாக்கத்தை நிரூபித்துள்ளது" என்று கூறினார்.


இஸ்ரேலுடன் தொடர்புபட்ட 54 கப்பல்கள் மீது தாக்குத நடத்தப்பட்டுள்ளது


அன்சார் அல்லாஹ்வின் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடுகையில், யெமன் தலைவர் இதுவரை 54 கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது பாப் அல்-மண்டப் ஜலசந்தி வழியாக இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல் கடந்து செல்வது எளிதான காரியமல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.


அனைத்திற்கும் மேலாக, செங்கடல் வழியாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பிரதேசத்தை நோக்கிச் செல்லும் கப்பல்கள் மீது 384 ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எமது இந்த நடவடிக்கை இஸ்ரேலிய படுகொலைகளை தடுத்து நிறுத்தும் நோக்கம் கொண்டது. ஆனால் செங்கடலை இராணுவமயமாக்கும் மற்றும் கடல்சார் பாதுகாப்பை ஆபத்திற்கு உட்படுத்தும் தரப்பாக அமெரிக்கா உள்ளது என்பதை வலியுறுத்தினார்.


"நாம் ஒருபோதும் தடுமாற மாட்டோம், ஏனென்றால் யெமன் ஆயுதப் படைகளின் செயல்பாடுகள் திறமையானவை, தாக்கம் மிக்கவை மற்றும் நிரந்தரமானவை, மேலும் எங்களது மக்கள் இயக்கங்கள் அவர்களின் உண்மையான விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றன."


அமெரிக்கா இஸ்ரேலிய எதிரிக்கு ஏராளமான இராணுவ மற்றும் அரசியல் ஆதரவை அளித்து இனப்படுகொலை நீடிக்க அனுமதித்தது மற்றும் சர்வதேச கோரிக்கைக்கு மாறாக போர்நிறுத்தத்தை அடையும் அனைத்து முயற்சிகளையும் தடுத்து நிறுத்தியது என்று அவர் கூறினார்.


"காஸா மீதான ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டு, முற்றுகை அகற்றப்படும் வரை பாப் அல்-மண்டாப் ஜலசந்தி வழியாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதிக்குச் செல்லும் கப்பல்களை யெமன் மக்கள் தொடர்ந்து தடை செய்து வருகின்றனர். எங்கள் நடவடிக்கைகள் செங்கடலில் நடந்து கொண்டிருக்கின்றன, வளர்ந்து கொண்டிருக்கின்றன, எதிரிகள் கற்பனை செய்து பார்க்க முடியாத பல ஆச்சரியங்களை நாங்கள் தயாரித்துள்ளோம், அவற்றை விரைவில் செயல்படுத்துவோம்."


காஸா மீதான ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி பயணம் செய்வதை தவிர்ப்பது மட்டுமே எந்தவொரு நாட்டிற்கும் கடல்சார் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரே விஷயம் என்று அல்-ஹூதி மேலும் கூறினார்.


YAF (Yemani Air Force) அதன் நடவடிக்கைகளை செங்கடல் மற்றும் அரேபிய கடல்களிலும், ஏடன் வளைகுடாவிலும் தொடர்கிறது, காஸா ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை இலக்கு வைத்துள்ளது, மேலும் யெமனுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கப்பல்களையும் குறிவைக்கிறது.


அமெரிக்க-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு குறித்து


"அமெரிக்கா மக்களையும் நாடுகளையும் மதிக்கவில்லை, காசாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறது, எனவே யெமனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்துகிறது" என்று தலைவர் அல்-ஹூதி தனது நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.


அமெரிக்கர்கள் இதில் மூக்கை நுழைத்து, பிரிட்டிஷாரை அவர்களுடன் இணைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனால் யெமனியர்களிடமிருந்து பெரும் அடிகளை வாங்கிக்கொண்டு இருக்கிறது பிரிட்டன் என்று கூறிய அவர், "அமெரிக்க-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு காரணமாக பிராந்தியத்தில் பதற்றமே அதிகரித்து வருகின்றது, அது யெமனின் இராணுவத் திறன்களை ஒருபோதும் பாதிக்காது," என்றும் விளக்கினார்.


"அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தாக்குதல்கள் யெமன் மக்களின் விருப்பத்தையும் மன உறுதியையும் முறித்துவிடாது; ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை விடுவிப்பதற்கான அவர்களின் விசுவாசத்தையும் பாதிக்காது. அமெரிக்கர்கள் எம்மை தாக்கி, அவர்களது வழிக்குக் கொண்டுவரலாம் என்று நினைத்தனர். இப்போது எங்கள் நாட்டிற்கு எதிரான அவர்களின் ஆக்கிரமிப்பின் இலக்குகளை அடையத் தவறிவிட்டதை ஒப்புக்கொள்கிறார்கள், மேலும் அவர்கள் எங்கள் வலிமையைப் பற்றி தங்கள் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.


எமது எதிரிகளின் ராணுவ நடவடிக்கைகள் யெமனின் திறன்களையோ, மன உறுதியையோ அல்லது வீதிகளில் மக்கள் பிரசன்னத்தையோ பாதிக்க மாட்டா என்று வலியுறுத்திய அவர், "எதிரிகள் ஆச்சரியப்படும் வழிகளில், நமது இராணுவ திறன்களை மேம்படுத்துகிறார்கள்" என்பதை எடுத்துக்காட்டினார்.


காஸா மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி யெமன் மக்கள் இயக்கத்தை அல்-ஹூதி ஆதரித்ததுடன், அது மேலும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.


சில இஸ்லாமிய நாடுகளின் வெட்கக்கேடான நிலைப்பாடு குறித்து விரிவான இயக்கங்கள், நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.


தனது நாட்டு மக்களை குறிப்பிட்டு பேசுகையில் "மற்ற அரபு நாடுகளில் இதுபோன்ற நிலைப்பாடுகள் இல்லாத நிலையில், பாலஸ்தீனத்துடனான உங்கள் வெகுஜன ஒற்றுமை ஒரு ஆசீர்வாதம்" என்று அல்-ஹூதி கூறினார்.


பலஸ்தீனர்களை நோக்கி பேசுகையில் "நீங்கள் தனியாக இல்லை, எங்கள் மக்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள், நாங்கள் சோர்வடைய மாட்டோம், நாங்கள் தடுமாற மாட்டோம், நாங்கள் பின்வாங்க மாட்டோம், நம்பிக்கை மற்றும் உள உறுதியுடன், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களை இறைவன் விடுவிக்கும் வரை நாங்கள் பயணத்தைத் தொடர்வோம்." அல்-ஹூதி அறிவித்தார்,

No comments

Powered by Blogger.