நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம்
எதிர்பார்க்கப்படும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய அரசாங்கம் போதாது என்று ஜே.வி.பி யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் இன்று(23.03.2024) இடம்பெற்ற மகளிர் மாநாட்டின்போது அவர இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய நிலையில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம். ஆனால், எதிர்பார்க்கப்படும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த 113 ஆசனங்களுடன் ஆட்சி அமைப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம்.
எதனை வேண்டுமானாலும் செய்ய வலிமையான பலம் இருக்க வேண்டும். முந்தைய அரசாங்கங்கள் நாட்டை அழிக்க பலமான பலத்தை பெற்றன.
எனினும், வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்க நாம் வலுவான சக்தியைப் பெற வேண்டும்.
நாசவேலைகள் மூலம் போட்டியாளர்களால் வீழ்த்த முடியாத பாரிய மக்கள் பலத்துடனும் நம்பிக்கையுடனும் இலங்கையில் முதல் மக்கள் அரசாங்கத்தை உருவாக்குவோம்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தி வலுவான அரசாங்கத்தை அமைக்க முடியும்“ என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment